Home
Computer

ரூ.25,900 விலையில் புதிய சோனி வயோ லேப்டாப்!

By Super

ரூ.25,900 விலையில் புதிய சோனி வயோ லேப்டாப்!
சோனி வயோ வரிசை லேப்டாப்புகள் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. இந்த லேப்டாப்புகள் உயர்தர தொழில் நுட்பங்களைக் கொண்டவை. அதே நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்தவை. தற்போது சோனி வயோ வரிசை லேப்டாப்புகளில் புதிதாக சோனி வயோ விபிசிஇஎல்25இஎன்/பி லேப்டாப் இணைந்திருக்கிறது.

இந்த புதிய லேப்டாப்பின் சிறப்புகளைப் பார்த்தால் இது எஎம்டி டூவல் கோர் ப்ராசஸர் மற்றும் எஎம்டி க்ராபிக்ஸ் கார்டைக் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 15.5 இன்ச் அளைவக் கொண்டுள்ளது. இதன் ரேம் 2ஜிபி ஆகும். அதுபோல் இன் ஹார்ட் டிஸ்க் 500 ஜிபியைக் கொண்டது. இணைப்பு வசதிகளாக ப்ளூடூத் மற்றும் வைஃபை ஆகியவையும் இந்த லேப்டாப்பில் உள்ளது. மேலும் இசைக்காக இன்டல் ஹை டெபினிசன் ஆடியோவும் உள்ளது.

இந்த புதிய சோனி வயோ விபிசிஇஎல்25இஎன்/பி லேப்டாப்பின் டிசைன் சோனி வயோ வரிசை லேப்டாப்புகளை ஒத்ததாகவே உள்ளது. சோனி வயோ விபிசிஇஎல்25இஎன்/பி லேப்டாப்பின் பரப்பு 369.8 மிமீ x 31.3 – 36.8 மிமீ x 248.4 மிமீ ஆகும். இதன் எடை 2.7 கிலோவாகும். இதன் கிவெர்ட்டி கீபோர்டு சவுகரியமாக இருக்கிறது.

இதன் 15.5 டிஸ்ப்ளேயின் ரிசலூசன் 1366 x 768 பிக்சல் ஆகும். இதன் டிஎப்டி வண்ண டிஸ்ப்ளே எல்இடி பேக்லிட் வசதி கொண்டது. இதன் திரை மிகவும் பளிச்சென்று இருக்கும். சோனி வயோ விபிசிஇஎல்25இஎன்/பி லேப்டாப் எஎம்டி இ-450 பிராசஸரையும் எஎம்டி எ450எம் எப்சிஎச் சிப்செட்டையும் கொண்டுள்ளது.

கிராபிக்சிற்காக எஎம்டி ரேடியோன் எச்டி 6320 க்ராபிக்ஸ் கார்டைக் கொண்டுள்ளது. அதனால் க்ராபிக்ஸ் மற்றும் வீடியோ கேம் போன்றவற்றிற்கு இந்த லேப்டாப் மிகவும் உதவியாக இருக்கும். இதன் 500ஜிபி ஹார்ட் டிஸ்க் எஸ்எடிஎ வகையைச் சேர்ந்தது ஆகும். இதில் உள்ள ஆப்டிக்கல் ட்ரைவ் மல்டி பார்மட் டிவிடிக்கள் மற்றும் சிடிக்களை சப்போர்ட் செய்கிறது. இதன் திரையின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் 0.3 மெகா பிக்சல் வெப்காம் வீடியோ கால் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

இணைப்புக்காக 4 யுஎஸ்பி போர்ட்டுகள், வைஃபை மற்றும் ப்ளூடூத் ஆகியவையும் இந்த லேப்டாப்பில் உள்ளன. இதன் எச்டிஎம்ஐ போர்ட் மூலம் இந்த டிவைசை புரொஜெக்டரில் இணைக்க முடியும். இந்த சோனியின் புதிய லேப்டாப்பின் விலை ரூ.25,900 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X