வயோ வரிசையில் புதிய லேப்டாப்புகள்

Posted By: Staff

வயோ வரிசையில் புதிய லேப்டாப்புகள்
சோனியின் வயோ மாடல் லேப்டாப்புகள் எப்போதுமே மிகப் பெரிய வரவேற்பு உண்டு. புதிதாக வந்திருக்கிற இந்த சோனி வயோ எஸ் மற்றும் வயோ இஇஸட் சீரிஸ் லேப்டாப்புகள் உலக அளவில் வெற்றிகரமான முறையில் விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த எஸ் மற்றும் இஸட் சீரிஸ் லேப்டாப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளதால் எஸ் வாங்கலாமா அல்லது இஸட் வாங்கலாம் என்ற குழப்பம் கண்டிப்பாக வரும்.

சோனி வயோ எஸ் சீரிஸ் லேப்டாப்புகள் ரோபுஸ்ட் 13 இன்ச் கொண்டதாகும். இஸட் சீரிஸ் லேப்டாப்கள் 13 இன்ச் கொண்டு மிகக் குறைந்த எடையுன் சிறந்த செயல் திறனை வழங்குகிறது. எஸ் சீரிஸ் சில்வரில் உள்ளது. அதன் ட்ராக் பேட் மிக மென்மையாக உள்ளது.

இஸட் சீரஸ் மிக ஸ்டைலாக இருக்கிறது. இதன் எடை 1.16கிகி ஆகும். அதே நேரத்தில் எஸ் சீரிஸ் 2.1கிகி எடை கொண்டுள்ளது. வியாபார விஷயங்களுக்கு இஸட் சீரிஸ் மிகச் சிறந்ததாக இருக்கும். இவை இண்டல் கோர் ஐ7 ப்ராசஸர் கொண்டு டர்போ பூஸ்ட் ஓவர்க்ளாக் வசதியைக் கொண்டிருக்கிறது. எஸ் சீரஸ் இண்டல் கோர் ஐ5 கொண்டிருக்கிறது. மேலும் ஐ7 ப்ராசஸர் கொண்டும் வருகிறது.

இந்த இரண்டு லேப்டாப்புகளும் விண்டோஸ் 7ல் இயங்குகின்றன. எஸ் சீரஸில் உள்ள இண்டக்ரேட்டட் ஜிபியு வீடியோ கேம்களுக்கு வசதியாக இல்லை. ஆனால் இஸட் சீரி்ஸ் எச்டி ரிசலூசன் டிஸ்ப்ளே கொண்டுள்ளதால் இதில் வீடியோ கேம் சிறப்பாக விளையாடலாம். மேலும் இது இண்பில்ட் இன்டல் கார்ட் மற்றும் 1ஜிபி விராம் எம்டி ரேடியோன் எச்டி 6650 ஜிபியு கொண்டுள்ளது. ஆனால் இவற்றில் க்ரைசிஸ் 2 மற்றும் அசாசின் க்ரீட்: ப்ரதர்ஹூட் போன்ற கேம்களை விளையாட முடியாது.

பேட்டரி திறனைப் பொறுத்தவரை இஸட் சீரிஸ் எஸ் சீரிஸை விட உயர்ந்த இருக்கிறது. அதாவது இஸட் சீரிஸ் 6.5 மணி நேர பேட்டரி திறனையும் எஸ் சீரிஸ் 4.5 மணி நேர பேட்டரி திறனையும் கொண்டுள்ளன. இரண்டுமே எச்டிஎம்ஐ அவுட்புட்டுகள், யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் ப்ளூடூத் தொடர்பும் கொண்டுள்ளன.

இஸட் சீரிஸ் லேப்டாப்புகள் ரூ.95,000 மற்றும் ரூ.1,50,000க்கும் கிடைக்கின்றன. எஸ் சீரிஸ் லேப்டாப்புகள் ரூ.45,000லிருந்து ரூ.65,000 வரையிலான விலையில் கிடைக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot