3டி மாயஜாலம் காட்டவரும் புதிய சோனி வயோ லேப்டாப்புகள்

Posted By: Staff

3டி மாயஜாலம் காட்டவரும் புதிய சோனி வயோ லேப்டாப்புகள்
மின்னனு பொருள்கள் மற்றும் கணினி தயாரிப்பில் சோனியின் பங்கு மிக முக்கியமாகும். அந்த வரிசையில் சோனி தனது வயோ எஸ் வரிசை லேப்டாப்புகளில் 3டி டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்துகிறது. இதில்,3டி படங்களை பார்த்து மகிழ விஷேச கண்ணாடிகள் எதுவும் அணிந்து கொள்ள வேண்டாம் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த புதிய சோனி வயோ எஸ் சீரிஸில் தரமான தொழில் நுட்பமும் அதே நேரத்தில் தரமான வெப் கேமராவும் உள்ளன. இந்த 3டி வசதி நம் கண்களையும் இதிலிருக்கும் வெப் கேமராவையும் கட்டி போட்டுவிடும். நமது கண்களின் அசைவுக்கேற்றார் போல இந்த வெப் கேமாரவும் அசைந்து நமக்கு சிறப்பான 3டி அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்த சோனி வயோ எஸ் 3டி லேப்டாப் இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர் மற்றும் 2.30 ஜிஹெர்டஸ் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் டர்போ பூஸ்ட் 3.40ஜிஹெர்ஸ் அளவு இருக்கும். அதோடு இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஆகும். மேலும் இது 32பிட் கன்பிகரேசனோடு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இதன் டிஸ்ப்ளே 16.4 இன்ச் அளவு கொண்டு 1920*1080 பிக்ஸல் கொண்டிருக்கும். மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் மெமரியை விரிவாக்கக்கூடிய தளங்களும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதனால் ஏராளமான பாடல்களையும், வீடியோக்களையும் இதில் சேமிக்கலாம்.

மற்ற சிறப்புகளைப் பார்த்தால் இது ப்ளூடூத் மற்றும் ப்ளூ ரே டிஸ் வசதியை வழங்குகிறது. மேலும் 8ஜபி மெமரியையும் வழங்குகிறது. அதுபோல் இது யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள் மற்றும் யுஎஸ்பி 3.0 போர்ட்டுகள் ஆகியவற்றையும் இது வழங்குகிறது.

அதுபோல் இது தரமான ஹெட்போன், மைக்ரோ போன் மற்றும் பேக்லிட் கீபோட் டச்பேட் தொழில் நுட்பம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என நம்பலாம். இதன் எடை 3.2 கிலோவாக இருக்கும். இதன் பேட்டரி லித்தியம் ஐயனாக இருப்பதால் 3 மணி நேரம் வரை தாங்கும் சக்தி கொண்டது.

இந்த சோனி வயோ எஸ் 3டி லேப்டாப்பின் விலை ரூ.40000மாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot