Home
Computer

ப்ளூரே ட்ஸ்க் வசதியுடன் புதிய சோனி வயோ லேப்டாப்

By Super
ப்ளூரே ட்ஸ்க் வசதியுடன் புதிய சோனி வயோ லேப்டாப்
சோனியின் எந்த ஒரு தயாரிப்பாக இருந்தாலும் அது சூப்பராக இருக்கும். குறிப்பாக அதன் லேப்டாப்பபின் சிறப்புகளைச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு அவற்றின் தரம் மிகுந்து இருக்கும். தற்போது சோனி புதிய வயோ வரிசை லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த வயோ வரிசையில் வரும் லேப்டாப்புகள் அனைவராலும் விரும்பப்படுகிறது. அதே நேரத்தில் பலரால் பாராட்டும் பெறுகிறது. இப்போது அந்த வயோ குடும்பத்திலிருந்து புதிதாக சோனி வயோ இஎச் என்ற புதிய லேப்டாப் அறிமுகமாகி இருக்கிறது.

சோனி வயோ இஎச் வரிசை லேப்டாப்புகள் நவீன இன்டல் கோர் ஐ5 ஒஎம் ப்ராசர் கொண்டு டூவல் தொழில் நுட்பத்துடன் வருகிறது. இந்த ப்ராசஸரின் வேகம் 2.30ஜி ஹெர்ட்ஸ் ஆகும். மேலும் அது இன்டல் டர்போ பூஸ்ட் தொழில் நுட்பத்தையும் கொண்டுள்ளது.

மேலும் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 3000 இந்த லேப்டாப்பில் உள்ளதால் இதில் திரைப்படம் பார்ப்பதற்கும், க்ராபிக்ஸ் வேலைகள் செய்வதற்கும் மற்றும் வீடியோ கேம் விளையாடுவதற்கும் சூப்பராக இருக்கும்.

சோனி வயோ இஎச் வரிசை லேப்டாப்புகளின் திரை 15.5 இன்ச் அளவு கொண்டு 1366 X 768 பிக்சல் ரிசலூசனைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த திரையில் எல்இடி பேக்லைட் தொழில் நுட்பமும் உள்ளதால் இதில் நமது கண்கள் கூசாது. இதன் மெமரியைப் பார்த்தால் அது எச்டிடி சேமிப்பு வசதி கொண்டு 640ஜிபி சேமிப்பைக் கொண்டுள்ளது.

சோனி வயோ இஎச் வரிசை லேப்டாப்புகளில் உள்ள இன்பில்ட் கேமராவில் மோஷன் ஐ மற்றும் மைக்ரோபோன் உள்ளதால் சேட்டிங் மற்றும் கான்பரன்சிங் செய்ய மிக பக்காவாக இருக்கும். வயர்லஸ் இணைப்புக்காக இது ப்ளூடூத் 3.0 ப்ளஸ் எச்எஸ் கொண்டுள்ளது.

மேலும் வைபை இணைப்பும் உள்ளது. இது 4000 எம்எஎச் மின் திறன் கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரியுடன் வருகிறது. அதன் மூலம் நாம் இதில் 3.5 மணி நேரம் வரை டிவிடியை இயக்கலாம். அதுபோல் இதன் டிபால்ட் வெளிச்சம் 5 மணி நேரம் ஆகும்.

மேலும் இது ப்ளூ-ரே டிஸ்க் ப்ளயர் கொண்டு வருவதால் இதில் ப்ளூ-ரே அனுபவத்தைப் பெற முடியும். அதே நேரத்தில் டிவிடியையும் பர்ன் செய்ய முடியும்.

சோனி வயோ இஎச் வரிசை லேப்டாப்பின் மொத்த பரப்பு 14.56 x 1.24 x 9.78 இன்ச் ஆகும். மேலும் இது கண்களைக் கவரும் வண்ணம் பல நிறங்களில் வருகிறது. இது 2ஜி இன்டல் கோர் ப்ராசஸர் கொண்டிருப்பதால் மல்டி மீடியா அனுபவத்தை நாம் இதில் சிறப்பாக அனுபவிக்கலாம்.

குறிப்பாக மற்ற லேப்டாப்புகளில் இல்லாத ஐ5 ப்ராசஸர் தொழில் நுட்பமும் மற்றும் ப்ளூ-ரே டிஸ்க்கும் இந்த லேப்டாப்புக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகளாகும்.

விலையைப் பொருத்தமட்டில் இந்த சோனி வயோ இஎச் வரிசை லேப்டாப்கள் மிக நியாயமான விலையில் வருகின்றன. அதாவது இது ரூ.30,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X