Home
Computer

சோனி வழங்கும் புதிய விண்டோஸ் 8 டேப்லெட்

By Karthikeyan
சோனி வழங்கும் புதிய விண்டோஸ் 8 டேப்லெட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் புதிய விண்டோஸ் 8 இயங்கு தளம் வரும் அக்டோபர் 26ல் விற்பனைக்கு வர இருக்கிறது. மைக்ரோசாப்ட் இந்த புதிய இயங்கு தளத்தை ஏசர், ஆசஸ் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களின் புதிய கணினி சாதனங்களில் பரிசோதனை செய்து பார்த்துவிட்டது.

அதனால் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய மேற்சொன்ன நிறுவனங்களின் புதிய கணினி சாதனங்கள் விரைவில் களம் இறங்க இருக்கின்றன. அந்த வகையில் சோனி நிறுவனமும் இந்த விண்டோஸ் 8 குடும்பத்தோடு இணைய இருக்கிறது.

அதாவது சோனி நிறுவனம் ஒரு புதிய விண்டோஸ் 8 டேப்லெட்டை விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு வயோ டூவோ 11 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட்டின் படங்களை ஒரு முக்கியமான இயங்கு தளம் வெளியிட்டிருக்கிறது.

அதன்படி இந்த புதிய டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும். இந்த டேப்லெட் 11 இன்ச் அளவுள்ள டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும். அடுத்ததாக இந்த டேப்லெட்டை மடக்கி வைக்க முடியும். இந்த டேப்லெட் பேக்லிட் கீபோர்டைக் கொண்டிருக்கிறது. மற்ற அம்சங்கள் பற்றி இன்னும் குறிப்பிடப்படவில்லை.

விரைவில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வரும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X