Home
Computer

சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம்

By Karthikeyan
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம்

டிஜிட்டல் உலகில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனம் எப்போதும் தனது தரமான கெட்ஜெட்டுகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இப்போது அந்நிறுவனம் தனது டேப்லெட்டுகளை புதிய தொழில் நுட்பங்கள் கொண்டு அப்டேட் செய்ய இருக்கிறது.

குறிப்பாக தனது சோனி எஸ் மற்றும் பி டேப்லெட்டுகளில் ஆன்ட்ராய்டு 4.0வை அப்டேட் செய்ய இருக்கிறது. மேலும் அதற்கான சோதனை முயற்சிகளை ஏற்கனவே சோனி தொடங்கிவிட்டது. எனவே அப்டேட் செய்யப்பட்ட புதிய சோனி டேப்லெட்டுகள் ஏப்ரல் மாதம் மத்தியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

சோனி பி மற்றும் எஸ் டேப்லெட்டுகள் சோனியின் மகுடங்களாக அமைந்த டேப்லெட்டுகளாகும். தற்போது இந்த டேப்லெட்டுகள் ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப் இயங்குதளத்தில் இயங்குகின்றன.

சோனி எஸ் டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 16 மில்லியன் வண்ணங்களைத் தாங்கக்கூடிய வசதி கொண்டு 9.4 இன்ச் அளவில் அகலமான திரையைக் கொண்டிருக்கிறது. இந்தத் திரையின் பிக்சல் ரிசலூசன் 800 x 1280 ஆகும். மேலும் ஆட்டோ போக்கஸ், டச் போக்கஸ் மற்றும் ஜியோ டேக்கிங் போன்ற வசதிகள் கொண்ட 5 மெகா பிக்சல் கேமராவைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இதன் பேட்டரி 31 மணி நேர இயங்கு நேரத்தையும் மற்றும் 400 மணி நேர ஓய்வு நேரத்தையும் வழங்குகிறது.

சோனி பி டேப்லெட்டின் முக்கிய அம்சங்களை எடுத்துக் கொண்டால் இந்த டேப்லெட் 16 மில்லியன் வண்ணங்களைத் தாங்கக்கூடிய அளவிற்கு டூவல் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடு திரையைக் கொண்டுள்ளது. இதன் 5 மெகா பிக்சல் கேமரா மிகத் தெளிவான படங்களையும் வீடியோவையும் எடுக்கும். மேலும் இதன் சேமிப்பு வசதியை எக்ஸ்டர்னல் கார்டு மூலம் 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். இதன் பேட்டரி இந்த சோனி பி டேப்லெட்டுக்கு 17 மணி நேர இயங்கு நேரத்தையும் 120 மணி நேர ஓய்வு நேரத்தையும் வழங்குகிறது.

இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே ப்ளூடூத் மற்றும் வைபை இணைப்பைப் பெற்றுள்ளன. எனவே இந்த டேப்லெட்டுகளில் ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளம் அப்டேட் செய்யப்படும் போது இதன் செயல்திறன் மற்றும் வேகம் மிக அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் யூசர் இன்டர்பேஸ் மல்டி டச் வசதி கொண்டது. ஆக இந்த சோனி டேப்லெட்டுகளின் ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதள அப்டேட் விரைவில் வந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X