வீடியோ கேம் பிரியர்களுக்கான புதிய சோனி டேப்லெட்!

Posted By: Karthikeyan
வீடியோ கேம் பிரியர்களுக்கான புதிய சோனி டேப்லெட்!

சோனி சமீபத்தில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் வகையி்ல் அமைந்த ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த டேப்லெட்டுக்கு சோனி டேப்லெட் எஸ் எஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சாதாரண டேப்லெட்டுகளை விட இந்த டேப்லெட் ரசிகர்களை வெகுவாக கவருகிறது. ஏற்கனவே தனது ப்ளேஸ்டேசன் மூலம் ஏராளமான விளையாட்டு பிரியர்களைத் தனது கைக்குள் வைத்திருக்கும் சோனி இந்த விளையாட்டு டேப்லெட் மூலம் இன்னும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த எஸ் டேப்லெட்டில் க்ராஷ் பேன்டிகூட் மற்றும் பின்பால் ஹூரோஸ் போன்ற விளையாட்டுகளை ஏற்கனவே சோனி இன்ஸ்டால் செய்திருக்கிறது. எனவே இந்த எஸ் டேப்லெட்டை வைத்திருப்போர் இந்த டேப்லெட்டை ப்ளூடூத் மூலம் ப்ளேஸ்டேசனுடன் இணைத்து இந்த விளையாட்டை அனுபவித்து விளையாடலாம்.

அதோடு இவ்வாறு விளையாடும் போது ப்ளே ஸ்டேசனில் இருக்கும் ஸ்பீக்கர் விளையாட்டுக்கேற்ப அதிரடியான இசையையும் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் கைக்கு அடக்கமாகவும் உள்ளதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கும்.

சோனி எஸ் டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளத்தில் இயங்குவதால் இதன் இயங்கு திறனும் அபாரமாக இருக்கும். அதோடு இந்த டேப்லெட் 8 மணி நேர இயங்கு நேரத்தையும் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் ரூ.22,000க்கு விற்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்