விண்டோஸ் 8 இயங்குதளத்துடன் சோனியின் புதிய டேப்லெட்!

ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் கோலோச்சும் இக்காலத்தில் சோனி ஒரு புதிய விண்டோஸ் 8 டேப்லெட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த டேப்லெட் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
சோனியின் இந்த புதிய டேப்லெட் பெரிய டிஸ்ப்ளேயுடன் க்யூவெர்ட்டி கீபோர்டைக் கொண்டிருக்கும். இந்த புதிய டேப்லெட்டுக்கு வயோ யு என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மேலும் இந்த டேப்லெட் ஒரு தனி நபர் கணினியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. விண்டோஸ் 8 இயங்குதளத்தில் வரும் இந்த டேப்லெட்டின் திரை தொடு வசதி கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஆசஸ் இஇஇ பேட் ஸ்லைடருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வயோ டேப்லெட்டின் ஹார்ட்வேர் பற்றி அதிக தகவல்கள் வெளிவரவில்லை. கீபோர்டுக்குக் கீழ் மவுஸ் பட்டன்கள் உல்ளன. அதுபோல் முழு அளவிலான யுஎஸ்பி போர்ட்டுகள் இந்த டேப்லெட்டின் வலது பக்கம் உள்ளன.
ஜனவரியில் நடந்த நுகர்வோர் கண்காட்சியில் இந்த டேப்லெட்டின் மாதிரி பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த டேப்லெட் மிக ஸ்டைலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லெட்டை நோட்புக் பிசியாகவும் பயன்படுத்த முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications