டேப்லெட்டுகளின் இயங்குதளங்களை அப்கிரேட் செய்யும் சோனி!

Posted By: Staff
டேப்லெட்டுகளின் இயங்குதளங்களை அப்கிரேட் செய்யும் சோனி!
பல டேப்லெட் உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அவ்வப்போது தமது வாடிக்கையாளர்களுக்காக இயங்கு தளங்களை அப்டேட் செய்து வருகின்றனர். அந்த வகையில் சோனி நிறுவனமும் தனது எஸ் டேப்லெட் மற்றும் பி டேப்லெட் மாடல்களுக்கு புதிய ஃப்ர்ம்வேரை அப்க்ரேடைச் செய்ய இருக்கிறது.

குறிப்பாக இந்த கிறிஸ்துமஸ் சீசனில் சோனி டிவைஸ்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு இனிப்பான செய்தி ஆகும். சோனி டிவைஸ்களுக்கு ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் அப்டேட் செய்யப்படும் என்று சோனி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் எப்போது அது செய்யப்படும் என்பது தெரியவில்லை. அதுபோல் டேப்லெட் பி மாடல்களுக்கான சாப்ட்வேர் அப்டேட் சமீபத்தில் நடந்தது.

சோனியின் எஸ் மற்றும் பி டேப்லெட் மாடல்கள் கட்டிங் எட்ஜ் கொண்டு வருகின்றன. சோனி டேப்லெட் எஸ் 1280 x 800 பிக்சல் ரிசலூசன் கொண்ட 9.4 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. அதுபோல் என்விடியா டேக்ரா 2 டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டுள்ளது.

இதன் ப்ராசஸர் 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இதை வாங்குபவர் 16ஜிபி அல்லது 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட டிவைசைத் தேர்ந்து கொள்ளலாம். மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் எக்ஸ்டர்னல் மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும்.

இந்த எஸ் டேப்லெட்டின் முக்கிய கேமரா 5 மெகா பிக்சல்களைக் கொண்டுள்ளது. இந்த கேமார வீடியோவை ரிக்கார்ட் செய்யும். அதே நேரத்தில் 720பி ரிசலூசனை சப்போர்ட் செய்யும். மேலும் இதன் வீடியோ ரெக்கார்டிங் வேகம் வினாடிக்கு 30 ப்ரேம்களாகும்.

இதன் இரண்டாவது கேமரா 0.3 மெகா பிக்சல்களைக் கொண்டுள்ளது. இதை வீடியோ சாட்டிங்கிற்கு மிக அருமையாகப் பயன்படுத்தலாம். தற்போது இதன் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு 3.1 ஆகும்.

மறுபக்கம் டேப்லெட் பி மாடல்களைப் பார்த்தால் அவை 5.5 இன்ச் அளவுகள் கொண்ட 2 திரைகளுடன் வருகின்றன. இந்த திரையின் ரிசலூசன் 1024 x 480 ஆகும். இதன் பிராசஸர் என்விடியாவின் டேக்ரா 2 டூவல் கோர் ஆகும். இதன் இன்டர்னல் மெமரி வசதி 4 ஜிபி மட்டுமே. ஆனால் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் மெமரியை விரிவுபடுத்த முடியும். தற்போது இது ஆன்ட்ராய்டு 3.2 இயங்கு தளத்தில் இயங்குகிறது.

ஆகவே இந்த எஸ் மற்றும் பி மாடல் டேப்லெட்டுகளுக்கு மிக விரைவில் புதிய ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளம் அப்டேட் செய்யப்படும் என்று சோனியின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அது விரைவாக அதாவது புத்தாண்டின் தொடக்கத்தில் நடக்கும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்