மிக உயர்ந்த தரத்தில் விண்டோஸ் 8ல் வரும் சோனியின் புதிய வயோ லேப்டாப்

கேமரா, கணினி, ஸ்மார்ட்போன் மற்றும் இசைப் பேழைகள் போன்றவற்றின் உற்பத்தியில் கில்லி ஆடி வரும் சோனி தற்போது விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு புதிய உயர்தர லேப்டாப்பை அறிமுகம் செய்திருக்கிறது. வயோ டூவோ 11 என்று அழைக்கப்டும் இந்த லேப்டாப் மிகவும் உயர்ந்த தரத்தில் வருகிறது. இதன் டிசைன் பார்ப்பதற்கு பக்காவாக இருக்கிறது.
இதன் தொழில் நுட்ப வசதிகளைப் பார்க்கும் போது குறிப்பாக இந்த லேப்டாப்பில் 11.6 இன்ச் அளவிற்கு ஒரு முழு எச்டி ஆப்டிகான்ட்ராஸ் டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கும். மேலும் இதில் யுஎஸ்பி 3.0, யுஎஸ்பி ஸ்லீப் சார்ச் போன்றவை உள்ளதால் இந்த லேப்டாப்பிலிருந்து மொபைல்கள் மற்றும் இசைப் பேழைகளை சார்ஜ் செய்ய முடியும்.
விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் இந்த லேப்டாப் எச்டிஎம்ஐ, எர்த்நெட் மற்றும் விஜிஎ வீடியோ போர்ட் போன்ற இணைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் இன்டல் கோர் ப்ராசஸரில் வருவதால் மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.
இந்த லேப்டாப்பின் பூட்டிங் மிக வேகமாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப்பில் பாதுகாப்பிற்கான ஏராளமான தொழில் நுட்ப வசதிகளும் உள்ளன. இந்த லேப்டாப் மிக உயர்ந்த தரத்தில் வருவதால் இது ரூ.89,990க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த லேப்டாப் வரும் டிசம்பரில் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வந்துவிடும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications