Home
Computer

சோனி வழங்கும் அற்புத வயோ லேப்டாப்புகள்

By Super
சோனி வழங்கும் அற்புத வயோ லேப்டாப்புகள்
எந்த துறையிலும் போட்டி இருப்பது நல்லதே. அதனால் பயனடைபவர்கள் அதை நுகர்வோரே ஆவர். அதுபோல் பல வகையான லேப்டாப்புகள் தினமும் வருகின்றன. அந்த வரிசையில் சோனியின் வயோ மாடல் லேப்டாப்புகள் கண்டிப்பான போட்டியாக இருக்கும்.

ஆப்பிளின் புதுமைகள் சோனியின் படைப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது ஆப்பிளின் மேக்புக் ஏர் சரியும் இந்த வேளையில் தனது உயர்ந்த தரத்தில் வரும் வயோ லேப்டாப்புகளை சோனி களமிறக்க இருக்கிறுது. சோனி வயோ எஸ் சீரிஸ், எல் சீரிஸ், எப் சீரிஸ், இ சீரிஸ் மற்றும் சி சீரிஸ் என்று லேப்டாப்புகள் வந்தாலும் அவை எஸ் சீரிஸ் மற்றும் எப் சீரிஸ் என்று அழைக்கப்படுகின்றன.

குறிப்பாக படம் பார்க்க வேண்டுமானால் வயோ எம்இன் 15.5 இன் திரை கொண்ட லேப்டாப் மிக அருமையாக இருக்கும். அதுபோல் சோனி வயோ எஸ்எயின் 13.3 இன்ச் திரை கொண்ட லேப்டாப் தரமான டெபினிசனைத் தரும். மேலும் இந்த லேப்டாப்புகள் எல்லாமே 1 இன்ச்சிக்கும் குறைவான மெல்லியதாக இருக்கின்றன.

அதனால் பார்ப்பதற்கு மிக அட்டகாசமாக இருக்கும். மேலும் இவற்றின் அடியில் ஸீட் ஸ்டைல் பேட்டரி உள்ளது. அடுத்ததாக இதில் ரேடியோன் ஹைப்ரீட் க்ராபிக்ஸ் உள்ளதால் இது ப்ராசஸரையும் க்ராபிக்சையும் இணைக்க வல்லது. இந்த வயோ எஸ்எ மற்றும் எஸ்இ ஆகியவற்றின் விலை ரூ.50,000லிருந்து இருக்கும்.

சோனி வயோ எப் மற்றும் எல் சீரிஸ் லேப்டாப்புகள் ப்ரீ இன்ஸ்டால்ட் சாப்ட்வேர்களுடன் இன்டலின் கோர் ப்ராசஸர்களைக் கொண்டுள்ளன. இந்த சீரிஸ்கள் சோனியின் இமாஜினேசன் ஸ்டூடியோ மல்டிமீடிய எடிசன் அறிமுகத்தில் 200 டாலருக்கு கொடுக்கப்பட்டன. மேலும் இதன் வெர்சன்கள் சவுண்ட் போர்ஜ் ஆடியோ ஸ்டூடியோ, வேகாஸ் மூவிஸ் ஸ்டூடியோ எச்டி ப்ளாட்டினம் மற்றும் மீயூசிக் ஸ்டூடியோ ஆகும்.

சோனி வயோ சி மற்றும் இ சீரிஸ்கள் கோர் ஐ7 மற்றும் ஐ5 போன்ற ப்ராசஸர்களைக் கொண்டுள்ளன. இவை பிங்க் மற்றும் சில்வர் மாடல்களில் கருப்பு வயோ ஒய் மாடலை வழங்குகிறது.

இப்போது சோனி வயோ வாடிக்கையாளர்களுக்கு இந்த அக்டோபரில் மீயூசிக் அன்லிமிட்டட் திட்டத்தை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் முதல் முறையாக வாடிக்கையாளர்களுக்கு 180 நாள் ட்ரையல் ப்ரீயட் வழங்கப்படுகிறது.

குறிப்பாக சோனி தனது படைப்புகளை வர்த்தகம் செய்வதில் சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனால் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய சோனியின் படைப்புகளை வாங்க வேண்டுமானால் ஆன்லைனில் பார்த்தாலே போதும். அவற்றை நாம் தெரிந்து கொண்டு வாங்க முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X