Home
Computer

முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய ஆல் இன் ஒன் கம்ப்யூட்டர்!

By Karthikeyan
 முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய ஆல் இன் ஒன் கம்ப்யூட்டர்!

சமீபத்தில் மெயின் கியர் நிறுவனம் சோலோ 21ன் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட வெர்சனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சோலோ 21 ஒரு ஆல் இன் ஒன் பிசி ஆகும்.

இந்த சோலோ 21 பிசி அதிகமான சக்தியைக் கொண்டது. மேலும் இது ஒரு அடுத்த தலைமுறைக்கான கணினி என்று அழைக்கலாம். ஏனெனில் இந்த கணினி அடுத்த தலைமுறைக்கான தொழில் நுட்பங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருக்கின்றது.

இந்த சோலோ 21 மிக அருமையான தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. இதில் மிக வேகமாக மின் அஞ்சலை சரிபார்க்க முடியும்.

இந்த சோலோ 21 சூப்பரான தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த சோலோ 21 டூவல் சேனல் டிடிஆர்3-1333 மெமரியைக் கொண்டிருக்கிறது. இதன் மெமரி அளவு 16 ஜிபி ஆகும். மேலும் இந்த பிசி யுஎஸ்பி 3.0ஐக் கொண்டுள்ளது. அதிவேக எக்ஸ்டர்னல் சேமிப்புக்காக இந்த பிசி இசட்டா கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 1080பியை வழங்குகிறது. மேலும் இந்த பிசியில் எஸ்எஸ்டி கேச்சிங் தொழில் நுட்பமும் உள்ளது.

இந்த சோலா 21 முழு எச்டி ப்ளேபேக் மற்றும் டைரக்ட்எக்ஸ் 10ஐ சப்போர்ட் செய்கிறது. இதன் இயங்குதளம் விண்டோஸ் 7 ஆகும். இன்டலின் எச்61 சிப்செட்டை இந்த பிசி கொண்டிருக்கிறது. இதன் 1.3 எம்பி வெப்காம் வீடியோ காலிங்கிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த சோலோ 21ன் அடுத்த முக்கிய அம்சம் என்னவென்றால் இது எந்த ப்ராசஸரையும் சப்போர்ட் செய்யும். எனவே இதை வாங்குவோர் தமக்கு தேவையான ப்ராசஸர் அளவில் வாங்கிக் கொள்ளலாம். இணைப்பு வசதிக்காக இந்த பிசி ஜிகாபிட் எர்த்நெட் கண்ட்ரோலரைக் கொண்டுள்ளது. இந்த சோலா 21ன் தொடக்க நிலை மாடலின் விலை ரூ.50000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X