Home
Computer

புதிய சாப்ட்வேரைப் பெறும் மோட்டோரோலா அட்ரிக்ஸ் எச்டி

By Karthikeyan
புதிய சாப்ட்வேரைப் பெறும் மோட்டோரோலா அட்ரிக்ஸ் எச்டி

மோட்டோராலாவின் அட்ரிக்ஸ் எச்டி என்ற ஸ்மார்ட்போன் உலக அளவில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த போனை பலர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இந்த போனில் ஒரு புதிய சாப்ட்வேரை அப்டேட் செய்திருக்கிறது மோட்டோரோலா. இந்த அப்டேட் மூலம் இந்த போனைப் பயன்படுத்துவோர் மேலும் பல புதிய தொழில் நுட்ப வசதிகளை பெற முடியும்.

77.12.11எம்பி886.எடிடி.இன்.யுஎஸ் என்று அழைக்கப்படும் இந்த சாப்ட்வேர் அட்ரிக்ஸ் போனில் அப்டேட் செய்யப்பட்டால் இந்த போனில் உள்ள கேமரா, வைபை மற்றும் பாதுகாப்பு வசதிகள் இன்னும் புதிய பொலிவு பெறும் என்று மோட்டோரோலா அறிவித்திருக்கிறது.

இந்த சாப்ட்வேரை அப்டேட் செய்யலாம் என்ற அறிவி்ப்பு வந்தவுடன் இந்த போனைப் பயன்படுத்துவோர் உடனே அப்டேட் செய்யவும் அல்லது தள்ளிப் போடவும் என்ற குறிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

அப்டேட் செய்வதற்கு முன்பு பாதி அளவிற்காவது போனில் சார் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். மேலும் வைபை வழியாக இந்த அப்டேட்டை செய்ய வேண்டும்.

மேலும் இந்த அப்டேட் மூலம் அட்ரிக்ஸ் போனில் உள்ள பேட்டரி மற்றும் இஎ, கேம்லாப்ட் விளையாட்டுகள் போன்றவை இன்னும் தரமாக இருக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X