Home
Computer

இணைய இணைப்பு இல்லாமல் இருக்க முடியுமா உங்களால்...?

By Keerthi

இன்றைக்கு நம்மை அதிக நேரம் ஓரிடத்தில் உட்கார வைப்பது இந்த கம்பியூட்டரும் இன்டர்நெட்டும் தான் இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் கண்ட முடிவுகள் இதோ.

இன்றைக்கு இந்தியாவில் சராசரியாக ஒருவரால் நாளொன்றுக்கு 8 மணி நேரம் இணையப் பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இணைப்பில் இருப்பவர்கள், அவர்கள் விழித்திருக்கும் நேரத்தில் பாதிக்கு மேலான நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர்.

இது வாரத்திற்கு 58 மணி நேரமாக உள்ளது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதிப்பேருக்கு, இணைய தொடர்பு அற்ற நிலையில் முதல் மூன்று மணி நேரம் ஒருவகை மனப்பாதிப்பில் இருந்தவர்களாகவே உள்ளனர்.

இன்னொரு ஆய்வில், இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், ஒரு வாரத்தில், இணைய உலாவில் 12.9 மணி நேரமும், சமுதாயத் தளங்களில் 9.7 மணி நேரமும், மின்னஞ்சல் பயன்படுத்துவதில் 6.1 மணி நேரமும் செலவழிக்கின்றனர். இந்த ஆய்வு, இணையம் பயன்படுத்தும் 500 பேர்களைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது. இவர்கள் வயது 18 லிருந்து 64 வரை உள்ளவர்கள்.

இணைய இணைப்பு இல்லாமல் இருக்க முடியுமா உங்களால்...?

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 86% பேர், தாங்கள் இணைய இணைப்பில் இல்லாமல் 24 மணி நேரத்திற்கு மேல் இருக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்தனர்.

இணையத் தொடர்பு இல்லாமல் போனால், தங்கள் அத்தியாவசிய வேலை அதிகம் பாதிக்கப்படும் எனவும் கூறினர். அடுத்ததாக, இவர்கள் முக்கியத்துவம் அளித்தது சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துவதுதான்.

ஒவ்வொருவரும் வீட்டில், குறைந்தது இரண்டு சாதனங்களையாவது இன்டர்நெட்டில் இணைத்து பயன்படுத்துகின்றனர்.

மேலும், இவர்களில் 78% பேர் தங்கள் கம்ப்யூட்டர்களில் அடிப்படைப் பாதுகாப்பினை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளும் புதிய மால்வேர் புரோகிராம்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இல்லை என நார்டன் ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர்.

இணைய இணைப்பு பெறுவதில் 86% அளவில் கம்ப்யூட்டர்களும், 83% அளவில் மொபைல் போன்களும் பயன்படுத்தப்படுகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X