ரூ.42,990 விலையில் ஸ்மார்ட்ரான் அறிமுகம் செய்துள்ள புதிய லேப்டாப் குறித்து பார்ப்போமா?

|

இந்தியாவின் முதல் குளோபல் டெக்னாலஜி நிறுவனமான ஸ்மார்ட்ரான் சமீபத்தில் புதிய அடுத்த தலைமுறையினர்களுக்காக அறிமுகம் செய்துள்ள டிபுக் ஃபிளக்ஸ் லேப்டாப், விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்குவதோடு லேப்டாப் மற்றும் டெப்ளட் பயன்படுத்தும் சிறப்பான அனுபவத்தை தருகிறது.

ரூ.42,990 விலையில் ஸ்மார்ட்ரான் அறிமுகம் செய்துள்ள புதிய லேப்டாப் .!

இந்த டிபுக் ஃபிளக்ஸ் லேப்டாப் சந்தையில் ரூ.42990 மற்றும் ரூ.52990 ஆகிய விலைகளில் எம்3 மற்றும் ஐ5 வெர்ஷனில் கிடைக்கின்றது. மே 13 முதல் இந்த லேப்டாப்பை பிளிப்கார்ட் இணையதளத்தில் பெற்று கொள்ளலாம்.

இந்த டிபுக் ஃபிளக்ஸ் லேப்டாப்பில் 12.2 இன்ச் WQXGA டிஸ்பே 2560x1600 ரெசலூசனில் உள்ளது. மேலும் லேப்டாப் பிங்கர் டச் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த டிபுக் ஃபிளக்ஸ் லேப்டாப் முன்பக்கம் இரண்டு மெகாபிக்சல் கேமிராவையும் பின்பக்கம் ஐந்து மெகாபிசல் கேமிராவையும் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி டூயல் மைக், ஸ்பீக்கர்ஸ் மற்றும் டூயல் பேண்ட் வைபை, புளூடூத் ஆகியவைகளையும் கொண்டது. 7வது தலைமுறை இண்டல் கோர் எம்3, 7Y30, (1.00 GHz up to 2.60 GHz) பிராஸசர் மற்றும் 7வது தலைமுறை இண்டல்கோர் ஐ5, 7Y54, (1.20 GHz up to 3.20 GHz) பிராஸசரையும் கொண்டது.

தனித்திறமையான டூயல் டோன், அருமையான டிசன் மற்றும் 150 டிகிரியில் செயல்படும் தன்மை ஆகியவை இந்த லேப்டாப்பின் சிறப்பு. மேலும் இதில் உள்ள கீபோர்டு குறைந்த வெளிச்சத்திலும் சிரமமின்றி டைப் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த லேப்டாப்பில் தண்டர்போல்ட் 3யூஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளதால் இதன் மூலம் 40ஜிபிபிஎஸ் அளவில் டேட்டாக்களை டிரான்ஸ்பர் செய்ய முடியும். ஆரஞ்ச், கிரே மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த லேப்டாப் மிக வேகமாக சார்ஜ் ஆகும் தன்மையையும் கொண்டது.

ரூ.42,990 விலையில் ஸ்மார்ட்ரான் அறிமுகம் செய்துள்ள புதிய லேப்டாப் .!

இந்த லேப்டாப்பை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் இந்த நிறுவனம் கூறியபோது, 'இந்த வகை லேப்டாப்பை பயன்படுத்துவதால் ஆச்சரியம் தரத்தக்க வகையில் அனுபவம் கிடைக்கும் என்று கூறியுள்ளது. இந்த டிபுக் லேப்டாப் வெளியில் எடுத்து சென்று மல்டிபர்ப்பஸ்க்காக பயன்படுத்துவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

ஏற்கனவே ஸமர்ட்ரான் நிறுவனம் சமீபத்தில் டிபோன்பி என்ற புதிய வகை டிவைஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிறுவனம் டிஸ்கோ கிங் என்ற நிறுவனத்துடன் இணைந்து பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் இந்த நிறுவனம் பப்பிலஹரியுடன் இணைந்து புரமோஷன் பாடல் ஒன்றையும் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Smartron launches tbook flex 2 in 1 laptop at Rs 42990 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X