லெனோவா வழங்கும் உலகின் சிறிய 'காம்பெக்ட்' கம்ப்யூட்டர்!

By Super
|

லெனோவா வழங்கும் உலகின் சிறிய 'காம்பெக்ட்' கம்ப்யூட்டர்!
இப்போது பெரும்பாலான வீடுகளை மேசைக் கணினிகளுக்குப் பதிலாக லேப்டாப்புகள் அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டன. ஏனெனில் இப்போது வரும் லேப்டாப்புகள் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் குறைந்த விலையில் வருவதால் பெரும்பாலானோர் லேப்டாப்பையே நாட ஆரம்பித்திருக்கின்றனர்.

ஆனாலும் செயல்பாடு மற்றும் இணைப்பு வசதிகளைப் பொறுத்தமட்டில் மேசைக் கணினியோடு லேப்டாப் போட்டிபோட முடியாது. மேசைக் கணினியில் உள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால் அதை வைக்க ஒரு பெரிய இடம் தேவைப்படும். ஆனால் மேசை கணினியின் செயல் திறன் மிக நம்பிக்கையாக இருக்கும்.

இடப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போது லெனோவா நிறுவனம் உலகின் மிகச் சிறிய மேசை கணினியை அறிமுகப்படுத்துகிறது. இந்த கணினியின் பெயர் ஐடியா சென்டர் கியூ-10 ஆகும். இது மற்ற மேசை கணினிகளை விட அளவில் மிகச் சிறியதாக இருக்கும். இதன் மொத்த பரப்பளவே 7.5 இன்ச் நீளத்தையும் 6.1 இன்ச் உயரத்தையும், 0.86 இன்ச் தடிமனையும் மட்டுமே.

இந்த ஐடியா சென்டர் கியூ-10 கணினி ஒரு ஹோம் தியேட்டர் வகை கணினி ஆகும். இதை மிக எளிதாக நமது டிவியில் இணைக்க முடியும். இது 2 பிரிவுகளில் வருகிறது. அதாவது கியூ-180-31102ஏயூ பிரிவு இன்பில்ட் ஆப்டிக்கல் ட்ரைவ் இல்லாமல் வருகிறது.

ஆனால் கியூ-180-31102பியூ கணினி ப்ளு-ரே ப்ளேயர் அல்லது டிவிடி பர்னர் கொண்டு வரும். ஆனால் 2 கம்ப்யூட்டர்களுமே இண்டல் ஆட்டம் டி-2700 பிராசஸரைக் கொண்டிருக்கும். இந்த பிராசஸரின் கடிகார வேகம் 2.13 ஜிஹெர்ட்ஸ் ஆகும்.

இந்த பிராசஸருக்கு மிக குறைந்த மின்சாரமே தேவைப்படும். அதனால் இதன் மூலம் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். லெனோவா ஐடியா சென்டர் கியூ-180 கம்ப்யூட்டரின் மேற்கண்ட 2 மாடல்களிலும் 500ஜிபி ஹார்டு டிஸ்க்கை கொண்டுள்ளன. அதன் சுழலும் வேகம் 5400 ஆர்பிஎம் ஆகும்.

மொத்தம் 6 யுஎஸ்பி போர்ட்டுகளை இந்த கணினி கொண்டுள்ளது. அதாவது 2 யுஎஸ்பி 3.0 வகையையும், 4 யுஎஸ்பி 2.0 வகையையும் கொண்டுள்ளது. இவை ஏஎம்டி ரேடியோன் எச்டி 6450எ கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளன. கிராபிக்ஸ் கார்டின் மெமரி அளவு 512எம்பி ஆகும். கியூ180-31102ஏயூ மாடல் கணினி 2 ஜிபி ரேமையும், கியூ-180-31102பியூ மாடல் கணினி 4ஜிபி ரேமையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X