ஸ்கைப்பில் வந்தாச்சு டிரான்ஸ்லேட் ஆப்ஷன்...!

Written By:

ஸ்கைப் பற்றி நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள் எனலாம் உலகம் எங்கும் இருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் இலவசமாக வீடியோ கால் செய்ய இது உதவும்.

இதன் எதிர்காலத்தை அறிந்த மைக்ரோசாப்ட் இதை தன் வசப்படுத்திகொண்டது தற்போது அதில் தொடர்ந்து பல புது மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றது.

அதன் ஒரு பகுதியாக விரைவில் ஸ்கைப் மொழியினை டிரான்ஸ்லேட்(Translate) செய்யும் டூலை ஸ்கைப்புக்கு அப்டேட் தர இருக்கின்றது.

ஸ்கைப்பில் வந்தாச்சு டிரான்ஸ்லேட் ஆப்ஷன்...!

இதன்மூலம் ஸ்கைப்பில் பாஷை தெரியாதவரிடமும் நீங்களா் உரையாடலாம் நீங்கள் உங்களது மொழியில் பேசினால் பேசுபவருக்கு அவரது மொழியில் கேட்கும்.

அதாவது ஸ்கைப்பில் நீங்கள் ஒருவருடன் தமிழில் உரையாடினால் அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்றால் Language Mode ல் English என்று அவர் மாற்றினால் போதும்.

அவருக்கு நீங்கள் பேசும் மொழி ஆங்கிலத்தில் கிடைக்கும் இந்த ஆண்டுக்குள் இதற்கான அப்டேட் அனைத்து ஸ்கைப் அக்கவுன்ட் யூஸர்ஸூக்கும் கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot