Home
Computer

எச்பி வழங்கும் ஆற்றல் வாய்ந்த 6 புதிய கம்ப்யூட்டர்கள்!

By Karthikeyan
எச்பி வழங்கும் ஆற்றல் வாய்ந்த 6 புதிய கம்ப்யூட்டர்கள்!

எச்பி நிறுவனம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தியா தர இருக்கிறது. அது என்னவென்றால் எச்பி புதிய 6 ஐவி மேசை கணினிகளை களமிறக்க இருக்கிறது என்பதாகும். ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வரும் இந்த கணினிகளுக்கு இப்போதே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த 6 மாடல்களில் ஒன்றான ஓம்னி 220க்யுடி மாடல் சூப்பரான டிசைனுடன் பீட்ஸ் ஆடியோ கொண்டு வருகிறது. இதன் தொடக்க விலை ரூ.50000 ஆகும்.

அடுத்ததாக ஓம்னிக்யுடி கணினி 27 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதன் விலை ரூ.60000 ஆகும்.

தொடுவசதி கொண்டு வரும் டச்ஸ்மார்ட் 520எக்ஸ்டி கணினி 23 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதன் விலை ரூ.50000 ஆகும். இந்த மூன்று கணினிகளும் ஆல் இன் ஒன் மாடலில் வருகிறது.

மற்ற 3 மாடல் கணினிகளும் ஸ்டேன் அலோன் மாடல்களில் வருகின்றன. அதாவது எச்பிஇ எச்8டி கணினியின் விலை ரூ.35000 ஆகும். அடுத்ததாக எச்பிஇ எச்8எக்ஸ்டி கணினி ரூ.40000க்கு விற்கப்படும். இவற்றில் உயர்ந்த தரத்தில் வரும் எச்பிஇ போனிக்ஸ் எச்9டி கணினியை ரூ.58000க்கு வாங்கலாம்.

மேற்சொன்ன இந்த 6 மேசைக் கணினிகளும் மிக உறுதி வாய்ந்த கணினிகளாகும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் இவை பலம் வாய்ந்த ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைக் கொண்டிருக்கின்றனர். அதனால் இவை எச்டி மீடியா மற்றும் 3டி க்ராபிக்சிற்கு உத்திரவாதம் அளிக்கும்.

இந்த ஏப்ரல் இறுதிக்குள் எச்பிஇ போனிக்ஸ் எ9டி ஐவி பிரிட்ஜ் மேசை கணினி விற்பனைக்கு வந்துவிடும். மற்ற 5 மாடல்களும் வரும் ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X