குழந்தைகளுக்கான சர்ச் என்ஜின்...

By Keerthi
|

உங்களது குழுந்தைகள், இணையத்தை உலா வர உட்கார்ந்தால், உங்களுக்கு பகீர் என்கிறதா? அவர்கள் பார்க்க கூடாத இணைய தளங்கள் தப்பித் தவறி வந்துவிடப் போகிறதே என்று பதறுகிறீர்களா? இது பொதுவாக அனைத்து பெற்றோருக்கும் இருக்கும் தவிப்பு தான்

அண்மையில், உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கூடிய தேடுதல் தளம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதன் இணைய முகவரி http://www.kidrex.org/. இது குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டு இயங்கும் தேடுதளம்.

இந்த தளம் Google Custom Search மற்றும் Google Safe Search தளங்களைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இணையத் தேடலைத் தருகிறது. குழந்தைகள் காணக்கூடாத தளங்களின் பட்டியலைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டு, அவற்றை விலக்கி, பார்க்கக் கூடிய தளங்களில் உள்ள தகவல்களை மட்டும் தருகிறது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

குழந்தைகளுக்கான சர்ச் என்ஜின்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

குழந்தைகள் ஆர்வம் காட்டும் விஷயங்கள் குறித்த தளங்களைப் பட்டியல் இட்டுக் காட்டுகிறது. இதில் உள்ள Parents பிரிவில் நாம் இத்தளத்தின் இயங்கு தன்மை குறித்து அறியலாம்.

மேலும் இணையப் பாதுகாப்பு குறித்து பல குறிப்புகளும் தரப்படுகின்றன. இந்த தளத்தினை ஹோம் பேஜாக மாற்றுவதற்கும் வழி தரப்பட்டுள்ளது.

இதில் தந்துள்ள குறிப்புகள் மற்றும் வழி காட்டுதல்களைப் பின்பற்றி செட் செய்துவிட்டால், உங்கள் குழந்தைகள் இந்த தளத்தினைப் பயன்படுத்தி, அவர்கள் தேடலை மேற்கொள்ளுமாறு செய்திடலாம்.

மற்ற பிற தேடுதலுக்கான தளங்களைப் போலவே இதுவும் செயல்படுகிறது. ஆனால், குழந்தைகளின் பாதுகாப்பான தேடலை மட்டுமே தன் முதல் நோக்கமாக வைத்துள்ளது.

எடுத்துக்காட்டாக, ஒரு சிறுவன் dinosaurs குறித்து அறிய, அந்த சொல்லை, இந்த தளத்தின் தேடல் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டியவுடன், குழந்தைகளை மனதில் கொண்டு டினோசார் குறித்து தகவல்களைத் தரும் தளங்களின் பட்டியல் மட்டுமே காட்டப்படும்.

இந்த தளத்தில் சிறுவர்களுக்கான கேம்ஸ், தகவல் பக்கங்கள் மற்றும் வண்ணம் தீட்டி மகிழப் பக்கங்களும் தரப்பட்டுள்ளன. ஒருமுறை இதனைப் பார்த்துவிடுங்கள்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X