Home
Computer

மூளையின் நினைவுகள் மற்றும் எண்ணங்களால் இயங்கும் புதிய கம்யூட்டர்

By Karthikeyan
மூளையின் நினைவுகள் மற்றும் எண்ணங்களால் இயங்கும் புதிய கம்யூட்டர்

கணினி உலகின் அடுத்த வளர்ச்சியாக அறிவியல் அறிஞர்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டிருக்கின்றனர். அதாவது கணினியில் உள்ள கர்சர்களை இதுவரை மவுசைக் கொண்டோ அல்லது விரல்களைக் கொண்டோ இயக்குவோம்.

ஆனால் நம் மூளையிலிருந்து வரும் நினைவுகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவை கணினியின் கர்சர்களை இயக்கும் அளவிற்கு ஒரு புதிய கணினி தொழில் நுட்பத்தை அறிஞர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இதன் மூலம் மூளை மட்டும் இயங்கக் கூடிய ஆனால் உடல் செயல் இழந்த முடக்குவாதமுற்றவர்கள் தங்கள் நினைவுகள் மற்றும் எண்ணங்களால் இந்த புதிய கணினி தொழில் நுட்பத்தின் மூலம் கணினியை இயக்க முடியும்.

ஸ்டேன்ட்போர்டிலிருக்கும் நியுரோ அறிவியல் அறிஞர்களும் மற்றும் நியுரோ என்ஜினியர்களும் இணைந்து இந்த புதிய கணினி தொழில் நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர்.

தற்போது அவர்கள் உருவாக்கியிருக்கும் ரிபிட் என்ற அல்காரிதம் நியூரல் ப்ரோஸ்தெடிக்சின் வேகத்தை அதிகரிக்கிறது. இந்த ரிபிட் கணினியைக் கட்டுப்படுத்துகிறது என்று ஸ்டேன்போர்ட் தெரிவித்திருக்கிறது. ஸ்டேன்போர்டின் எலக்ரிக்கல் என்ஜினியரிங், பயோ என்ஜினியரிங் மற்றும் நியூரோ பயாலஜி பேராசிரியரான கிருஷ்னா ஷெனாய் அவர்களின் தலைமையில் இந்த குழு இந்த புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

இந்த புதிய கணினி தொழில் நுட்பம் நடைமுறைக்கு வர இன்னும் 4 ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X