Home
Computer

சாம்சங் கேலக்ஸி எஸ் IIIக்கான சூப்பர் அக்சஸரிகள்!

By Karthikeyan
சாம்சங் கேலக்ஸி எஸ் IIIக்கான சூப்பர் அக்சஸரிகள்!

சாம்சங் தனது கேலக்ஸி எஸ் III ஸ்மார்ட்போனுக்கு ஒரு சில அக்சஸரிகளைக் களமிறக்கியிருக்கிறது. அவை சாம்சங் ரசிகர்களுக்கும் பெரிதும் பயனுள்ளவையாக இருக்கும்.

1. ஆல் ஷேர் காஸ் டோங்கிள்: இந்த டோங்கிள் மூலம் வயர்லஸ் வழியாக கேலக்ஸி எஸ் IIIயை நேரடியாக டிவியோடு இணைக்க முடியும். அதன் மூலம் கேலக்ஸியில் இருப்பவற்றை டிவியின் பெரிய திரையில் பார்க்கலாம்.

2. கேலக்ஸி எஸ் III சி பென்: இந்த பேனா சாம்சங்கின் ஒரு ஸ்டைலான கருவி ஆகும். இதைக் கொண்டு கேலக்ஸி எஸ் IIIஐ மிக எளிதாக இயக்கலாம்.

Galaxy S III C Pen:

3. பிலிப் கவர்: கேலக்ஸி எஸ் III ஸ்மார்ட்போனை பத்திரமாக வைப்பதற்கு ஒரு பாதுகாப்பு உறையை சாம்சங் வழங்குகிறது. இந்த உறை மிகவும் ஸ்டைலாக இருப்பதோடு ஸ்மார்ட்போனுக்கு சிறந்த பாதுகாப்பாகவும் இருக்கிறது.

4. கேலக்ஸி எஸ் III ஹோல்டர் மற்றும் பேட்டரி சார்ஜர்: கேலக்ஸி ஸ்மார்ட்போன் சார்ஜில் இருக்கும் போது ஸ்மார்ட்போனை தேவையான நிலையில் வைத்துக் கொள்ள இவை உதவுகின்றன.

5. கேலக்ஸி எஸ் III வைபை டிஸ்ப்ளே ஹப்: கேலக்ஸி ஸ்மார்ட்போனில் உள்ள எச்டிஎம்ஐயுடன் கூடிய வைபை டிஸ்ப்ளே ஹப் ஸ்மார்ட்போனிலிருந்து டிவிக்கு ஒரு லிங்கை வழங்குகிறது. இதன் மூலம் கேலக்ஸியை டிவியன் எச்டிஎம்ஐ போர்ட்டில் நேரடியாக இணைக்க முடியும்.

6. எஸ் பெப்பிள்: இது ஒரு சாம்சங்கின் கையடக்கமான எம்பி3 ப்ளேயர் ஆகும். இதை மிக எளிதாக சாம்சங் கேலக்ஸி எஸ் IIIல் பொருத்திக் கொள்ளலாம்.

7. எஸ் பெப்பிள்: இந்த எம்பி3 ப்ளேயரை உடலில் அணிந்து கொண்டு பாடல் கேட்டுக் கொண்டே உடற்பயிற்சி செய்யலாம், ஓடலாம், விளையாடலாம் மற்றும் வேலைகளைச் செய்யலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X