புத்தம் புது வடிவமைப்பில் வரும் சாம்சங் டேப்லெட்!

சாம்சங்கின் இந்த புதிய டேப்லெட்டின் வசதிகளைப் பார்த்தால் அது 11.6 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. அதுபோல் சாம்சங் எக்சினோஸ் பிராசஸரை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
மேலும் இந்த டேப்லெட்டைப் பற்றி ஏராளமான வதந்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதன்படி இந்த டேப்லட் ஆன்ட்ராய்டின் ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வதந்தி உண்மையாக இருக்குமானால் இந்த புதிய டேப்லெட்டுதான் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும் முதல் சாம்சங் டேப்லெட் ஆகும்.
மேலும் இந்த டேப்லெட் ரெட்டினா டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும் என்று பிஜிஆர் கூறுகிறது. அதுபோல் இதன் டிஸ்ப்ளே 10.1 இன்ச்சை விட அதிகமாகவும், டிஸ்ப்ளேயின் ரிசலூசன் 2560 x 1600 பிக்சலாக இருக்கும்.
இந்த டேப்லெட் சாம்சங்கின் எக்ஸினோஸ் 5250 சிபியுவில் இயங்கும். இது ஒரு மிக ஆற்றல் வாய்ந்த அதுவும் 2 ஜிகா ஹெர்ட்ஸ் கடிகார வேகத்தில் இயங்கும் பிராசஸர் ஆகும். இந்த டேப்லட்டின் விலை இன்னும் வெளிவரவில்லை. ஆனால் வரும் புத்தாண்டு தொடக்கத்தில் இந்த புதிய டேப்லெட் நமது கைகளில் கிடைக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications