Home
Computer

வரிசை கட்டும் சாம்சங்கின் 'சூப்பர் பாஸ்ட்' லேப்டாப்புகள்!

By Karthikeyan
 வரிசை கட்டும் சாம்சங்கின் 'சூப்பர் பாஸ்ட்' லேப்டாப்புகள்!

சாம்சங் தனது தனித்தவும் வாய்ந்த சாம்சங் 9 வரிசை லேப்டாப்புகளை அறிமுகப்படுத்திய பின் அவை உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றன. சாம்சங் லேப்டாப்புகள் என்பதற்காக அவை வரவேற்பைப் பெறவில்லை. மாறாக இவை டியூராலுமின் என்ற அலுமினிய பேனல்களை கொண்டு பக்காவான ஸ்டைலில் வந்ததால் அவை மக்களை மிக எளிதாகச் சென்றடைந்தன. அவற்றின் சூப்பர் டிசைன் மற்றும் டியூராலுமின் ஆகியவை இந்த லேப்டாப்புகளுக்கு அபாரமான அழகை வாரி வழங்கின.

இந்த வருடம் சாம்சங் வரிசை 9 லேப்டாப்புகளைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் சாம்சங் வரிசை 9 அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்புகளைக் களமிறக்க இருக்கிறது. ஆனால் இந்த புதிய லேப்டாப்புகளில் டியூராலுமினைப் பயன்படுத்தாமல் தனி ஷெல் அலுமினியம் டிசைனைப் பயன்படுத்துகிறது. இந்த புதிய லேப்டாப்புகள் 13.3 இன்ச் மற்றும் 15 இன்ச் ஆகிய இரண்டு மாடல்களில் வருகின்றன.

இந்த மிக எடை குறைந்த அல்டரா போர்ட்டபுள் 9 வரிசே லேப்டாப்புகளின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அவை பிரமிக்க வைக்கும் அளவில் உள்ளன. அதாவது இவற்றின் டிஸ்ப்ளே 13.3 மற்றும் 15 இன்ச் அளவுகளில் வருகின்றன. அதுபோல் இவற்றின் பிக்சல் ரிசலூசனும் 1366 x 768 மற்றும் 1600 x 900 முறையே வருகின்றன. மேலும் இந்த டிஸ்ப்ளேயில் சாம்சங் சூப்பர்ப்ரைட் எல்இடி வசதி உள்ளன.

சேமிப்பு வசதியைப் பார்க்கும் போது 13.3 மாடலில் 4ஜிபி ரேமும், 15 மாடலில் 8ஜிபி ரேமும் உள்ளன. எஸ்எஸ்டி கார்டு மூலம் சேமிப்பை 128 ஜிபி அளிவிற்கு அதிகரிக்கலாம். மேலும் இந்த லேப்டாப்புகளில் கார்டு ரீடர் மற்றும் மல்டி கார்டு ரீடர் போன்றவையும் உள்ளன.

இணைப்பு வசதிகளுக்காக ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி 3.0 போர்ட் ஆகிவையும் உள்ளன. பேட்டரி திறனைப் பார்க்கும் போது 13.3 மாடல் 7 மணி நேர இயங்கு நேரத்தையும் அதே நேரத்தில் 15 மாடல் 10 மணி நேர இயங்கு நேரத்தையும் கொண்டுள்ளது. அதுபோல் 13.3 மாடல் 2.5 எல்பிஎஸ் எடையையும் அதே நேரத்தில 15 மாடல் 3.5 எல்பிஎஸ் எடையையும் கொண்டிருக்கின்றன. இரண்டு மாடல்களுமே ஜெனியூன் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64 பிட் இயங்குதளத்தைக் கொண்டுள்ளன. அதுபோல் இரண்டுமே இன்டல் கோர் ஐ5-2467எம் 1.60 ஜிஹெட்ஸ் டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டுள்ளன.

சாம்சங் 9 வரிசை லேப்டாப்பின் 15 இன்ச் மாடல் ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப்பின் செயல்திறன் மற்றும் அவற்றின் டிசைனை ஒத்திருக்கிறது. ஆனால் இவற்றின் முக்கிய அம்சங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் இந்த லேப்டாப்புகள் 128 ஜிபி சூப்பர் பாஸ்ட் எஸ்எஸ்டி ட்ரைவ்கள் கொண்டிருப்பதனால் பூட்டிங் மிக வேகமாக இருக்கும். மேலும் இவற்றில் சாம்சங் பேட்டரி லைப் ப்ளஸ் தொழில் நுட்பம் உள்ளதால் இது பலவகையான 1500 சார்ஜ் சைக்கிள்கள் மூலம் இவற்றின் பேட்டரிகளின் 80% ஆயுளை சேமிக்கின்றது.

இந்த சாம்சங் 9 வரிசை 13.3 மற்றும் 15 இன்ச் லேப்டாப்புகள் ரூ.75,000க்குள் இருக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X