Home
Computer

சூப்பரான பேட்டரி பேக்கப்புடன் புதிய சாம்சங் அல்ட்ராபுக்!

By Karthikeyan
 சூப்பரான பேட்டரி பேக்கப்புடன் புதிய சாம்சங் அல்ட்ராபுக்!

15 இன்ச் அளவு கொண்ட சாம்சங்கின் புதிய 5 வரிசை அல்ட்ராபுக்குகள் விற்பனைக்கு வந்துவிட்டன. இந்த அல்ட்ராபுக்குகள் மிகவும் அடக்கமாக உள்ளன. மேலும் இந்த அல்ட்ராபுக்குகளில் பல உயர்தரமான தொழில் நுட்பங்களைப் பார்க்க முடியும்.

இந்த அல்ட்ராபுக்குகள் 500ஜிபி ஹார்ட் ட்ரைவையும், 1.6ஜிஹெர்ட்ஸ் இன்டல் கோர் ஐ5 2467எம் ப்ராசஸரையும் கொண்டுள்ளன. க்ராபிக்ஸ் வசதிக்காக எஎம்டி க்ராபிக்ஸையும் இந்த அல்ட்ராபுக்குகள் கொண்டுள்ளன.

இந்த அல்ட்ராபுக்குகளில் இணைப்பு வசதிகளுக்காக யுஎஸ்பி 3.0 போர்ட், விஜிஎ போர்ட், வயர்லஸ் லேன்802.11என், எர்த்நெட்10/100/1000 ஆர்ஜே-45 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் ப்ளூடூத் போன்ற தொழில் நுட்பங்கள் உள்ளன. இந்த 14 இன்ச் டிஸ்ப்ளே எல்இடி பேக்லிட் வசதி கொண்டது. இதன் பிக்சல் ரிசலூசன் 1,366 x 768 ஆகும். இந்த அல்ட்ராபுக்குகளில் துணை ஊபர் சவுண்ட ஹார்ட்வேர் உள்ளதால் இதில் இசை கேட்பதும் பிரமாதமாக இருக்கும்.

இந்த அல்ட்ராபுக்குகளில் டிவிடி பர்னர் உள்ளது. இதன் மெமரி அளவு 6ஜிபி ஆகும். மேலும் இந்த அல்ட்ராபுக்குகல் இன்டல் எச்எம்65 மதர்போர்டு சிப்செட்டைக் கொண்டிருக்கின்றன. கேமரா வசதிக்காக இந்த அல்ட்ராபுக்குகல் ஒரு வேப்காமையும் கொண்டுள்ளன. இவை வின் 7 ஹோம் ப்ரீமியம் இயங்குதளத்தில் இயங்குகின்றன. இவற்றின் ரேம் 6144 எம்பி ஆகும்.

மேலும் இந்த சாம்சங் அல்ட்ராபுக்குகளில் கீபோர்டு, தொடுதளம், ஸ்க்ரோலிங் மற்றும் டஸ்க்ரீட் க்ராபிக்ஸ் ஆகியவை அட்டகாசமாக உள்ளன. மேலும் பார்ப்பதற்கு மிக ஸ்டைலாக இருக்கின்றன. இவற்றின் பேட்டரி இந்த அல்ட்ராபுக்குகளுக்கு நீண்ட இயங்கு நேரத்தையும் அதே நேரத்தில் நீண்ட ஆயுளையும் வழங்குகின்றன.

இந்த 5 வரிசை அல்ட்ராபுக்குகள் ஆப்டிக்கள் ட்ரைவ்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்களை சப்போர்ட் செய்கின்றன. மேலும் இது குறைந்த மின்திறனிலும் இயங்கும் திறன் கொண்டதால் மின்சாரத்தை சேமிக்கவும் முடியும்.

இந்தியாவில் இந்த சாம்சங்கின் 5 வரிசை அல்ட்ராபுக்குகளை ரூ.55000க்கு வாங்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X