அனைத்து வசதிகளையும் கொண்ட சாம்சங் ஆர்வி 720 லேப்டாப்

Posted By: Staff

அனைத்து வசதிகளையும் கொண்ட சாம்சங் ஆர்வி 720 லேப்டாப்
சமீபத்தில் சாம்சங் நிறுவனம் புதிய அழகான ஆர்வி 720 என்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய லேப்டாப் சாம்சங்கின் பழைய டெஸ்க்டாப்பை ரிப்ளேஸ் செய்யும் என நம்பலாம்.

இதன் கீபேடுகள் டைப் செய்வதற்கு மிக லகுவாக இருக்கிறது. மேலும் இதன் டச்பேடின் கீழ் ப்ளஷிங் லைட்டுகள் உள்ளன. மேலும் இதன் டிஸ்ப்ளே 17.3 இன்ச அளவாகும் இது 1,600 x 900 ரிசலூசனைத் தருகிறது. மேலும் இது இண்டல் எச்டி 3000 க்ராபிக்ஸ் ப்ராசஸர் கொண்டுள்ளது.

சாம்சங் ஆர்வி 720, 2.1ஜிஹர்டஸ் கடிகார வேகத்தில் இயங்கக்கூடிய இண்டல் ஐ3- 2310எம் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. இதன் மொத்த சேமிப்பு வசதி 750 ஜிபி ஆகும். மேலும் எக்ஸ்டர்னல் மெமரி சப்போர்ட் 8ஜிபி ஆகும்.

அடுத்ததாக 3 யுஎஸ்பி போர்ட்டுகளையும் ப்ளூடூத்தையும் கொண்டுள்ளது. மேலும் இதன் யுஎஸ்பி போர்ட்கள் பல அளவுகளில் உள்ளன. அதனால பல வகையான டிவைஸ்களை இதில் இணைக்க முடியும். இதன் ஹெட்போனுக்கான இணைப்பு யுஎஸ்பி போர்ட்டுகளுக்கு வலது புறம் உள்ளது.

மேலும் தொடர்ச்சியாக பல மணி நேரம் இயங்கும் அளவிற்கு நிறைந்த மின் திறனைக் கொண்டிருக்கிறது. அதனால் இதை பயணம் செய்யும் போது தடையில்லாமல் இயக்க முடியும்.

இந்த சாம்சங் ஆர்வி 720ல் டிவிடி ரைட்டர் மற்றும் தரமான ஒலிப்பெருக்கிகள் உள்ளன. மேலும் இது எம்எஸ் ஆபிஸ் 2010 உடன் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64 கொண்டுள்ளது. மேலும் 1 வருட உத்தரவாதமும் தருகிறது.

சாம்சங்கின் விலையை எடுத்துக் கொண்டால் ரூ.24500 மட்டுமே. அதனால் இதை ஒரு மலிவு விலை லேப்டாப் என்றுகூட அழைக்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot