Home
Computer

13.6 இஞ்ச் திரையுடன் வரும் புதிய சாம்சங் லேப்டாப்!

By Super

13.6 இஞ்ச் திரையுடன் வரும் புதிய சாம்சங் லேப்டாப்!
அடக்கமான மற்றும் சிறிய லேப்டாப்புகளை தயாரிப்பதில் எல்லா நிறுவனங்களும் அதிக அக்கறை காட்டி வருகின்றன. 13 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சிறிய லேப்டாப்புகள் மிகவும் சிறியதாக பலருக்குத் தோன்றுகின்றன. இதை விட்டால் 15 மற்றும் 17 இன்ச் லேப்டாப்புகள் தான் உள்ளன. இதற்கு இடைப்பட்ட அளவில் லேப்டாப்புகள் இல்லை.

இந்த குறையை தீர்க்கும் விதமாக சாம்சங் நிறுவனம் இப்போது புதிய சாம்சங் ஆர்எப்-411 என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது. இதன் மொத்த அளவு 13.6 இன்ச் x 9.4 இன்ச் x 1.22-1.44 இன்ச் ஆகும். இதன் எடை 2.3 கிலோவாகும். இந்த லேப்டாப் மிக ஸ்டைலாக இருக்கிறது.

சாம்சங் ஆர்எப்-411ன் மேல் பகுதியில் கிராபிக்ஸ் வேலைப்பாட்டுடன் கூடிய சாம்சங்கின் முத்திரை உள்ளது. இதன் கீபோர் வெள்ளி கிரே நிறத்தில் உள்ளது. போர்ட்டுகள் அனைத்து இந்த லேப்டாப்பின் வலது மற்றும் இடது பக்கங்களில் உள்ளன. இது மெல்லியதாக உள்ளதால் இதை எடுத்துச் செல்வது மிகவும் எளிதானதாக இருக்கும்.

சாம்சங் ஆர்எப்-411ன் டிஸ்ப்ளே 14 இன்ச்சுடன் 1,366x769 பிக்சலைக் கொண்டுள்ளது. இது எல்இடி திரையை கொண்டிருக்கிறது. இதன் டச்பேடில் ஸ்க்ரோல் செய்யும் வசதியும் உண்டு.

சாம்சங் ஆர்எப்-411 2ஜி இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர் 2630 கியூஎம்மில் இயங்குகிறது. இந்த பிராசஸரின் கடிகார வேகம் 2 ஜிஹெர்ட்ஸ் ஆகும். இதன் கேச் மெமரி 6ஜிபி ஆகும். இதன் முக்கிய சிப்செட் இன்டல் எச்எம் 65 ஆகும்.

இதன் எஸ்-ஏடிஏ ஹார்டு டிஸ்க் 65ஜிபி சக்தியைக் கொண்டது. இது 7200 ஆர்பிஎம் வேகத்தில் சுழல்கிறது. மேலும் இந்த லேப்டாப் என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 525 ஆப்டிமஸ் கிராபிக்ஸ் கார்டைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு 2ஜிபி டிடிஆர்3 வகை எகஸ்டர்னல் கிராபிக் மெமரி கார்டும் இதில் இன்டக்ரேட் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் ஆர்எப்411ல் மொத்தம் 4 யுஎஸ்பி போர்ட்டுகள் உள்ளன. அவற்றில் 2 யுஎஸ்பி 2.0வும் 2 யுஎஸ்பி3.0வும் உள்ளன. இதன் மெமரி கார்டு ரீடர் மெமரி கார்டுகளான எஸ்டி, எஸ்டிஎச்சி, எஸ்டிஎக்ஸ்சி மற்றும் எம்எம்சி போன்ற பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யும்.

தகவல் பரிமாற்றத்திற்கும் இது ப்ளூடூத் 3.0ஐ கொண்டுள்ளது. மேலும் வைஃபை இணைப்பும் இந்த சாம்சங் லேப்டாப்பில் உள்ளது. அடுத்ததாக 2 ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த லேப்டாப்பில் உள்ளன. இதன் ஒவ்வொன்றின் மின் திறன் 1.5 வாட்ஸ்களாகும். எனவே, இந்த ஸ்பீக்கர்கள் தரமான இசையை வழங்கும்.

இந்த லேப்டாப்பின் மேல்புறத்தில் ஒரு 1.3 மெகா பிக்சல் வெப்காம் உள்ளது. இதன் மூலம் வீடியோ கால் செய்வது மிக எளிதாக இருக்கும். அதுபோல் இதில் உள்ள மைக்ரோபோன் இரைச்சலைத் தடுத்து தெளிவான இசையை வழங்கும். அனைத்து வசதிகளுடன் வரும் இந்த புதிய சாம்சங் ஆர்எப்-411 லேப்டாப்பின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X