Home
Computer

பட்டையை கிளப்ப போகும் சாம்சங்

இந்த வருடம் எலக்டிரானிக் சாதனங்களுக்கு இராசியான வருடமோ என்னவோ தெரியவில்லை 2013ல் பல முன்னனி நிறுவனங்களின் மொபைல்கள், ஸ்மார்ட்போன்கள்,டேப்லெட் மற்றும் கம்பியூட்டர்கள் வெளியாகி உள்ளன.

ஆப்பிள் நிறுவனம் WWDC 2013 எனும் நிகழ்வில் தனது புதிய ஓஎஸ்(OS)ஆன ஐஓஎஸ்7 மற்றும் மேக் புரோ ஆகியவற்றை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. ஈ3 ஈவன்ட்டில் பிஎஸ்4 மற்றும் இன்னும் பிற சாதனங்கள் பற்றிய அறிவிப்பும் வந்தது. அதன் தொடர்ச்சியாக சாம்சங் நிறுவனம் பிரீமியர் ஈவன்ட் 2013ல் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.


சாம்சங் நிறுவனத்தின் ஒவ்வொரு படைப்பும் தனது ரதிகர்களை கவரும் வண்ணமே உள்ளது. ஸ்மார்ட்போன் உலகில் பல முன்னனி நிறுவனங்களின் படைப்புகள் இருந்தாலும் சாம்சங்கே அதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறுது குறிப்பாக சாம்சங் கேலகிஸியின் மாடல்கள் மக்களிடையே பெரிய அபிமானத்தை பெற்றுள்ளது.

டி3 டெக் மேகசின் வெளியிட்டுள்ள 2013ன் டாப்10 எலக்டிரானிக் சாதனங்கள் வரிசையில் சாம்சங் எஸ்4 இரண்டாம் இடம் பிடித்துள்ளது இதில் ஆப்பிள் நிறுவனத்திற்க்கு பதினைந்தாவது இடம் தான். இதுவே ஆப்பிள்,பிளாக்பெரி போன்ற நிறுவனங்களை சாம்சங் பின்னுக்குத் தள்ளியுள்ளது என்பதற்க்கு சான்றாகும்.

பிரீமியர் ஈவன்ட் 2013ல் சாம்சங் நிறுவனம் தனது புதிய 6 படைப்புகளை வெளியிட்டு அதன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆன்டிராய்ட் ஜெல்லி பீன் மற்றும் வின்டோஸ்8 ஓஎஸ் உடன் இயங்கக் கூடிய ஏடிஐவி(ATIV) Q எனும் சாதனமும் இதில் அடங்கும். எஸ்4 ரின் புதிய வண்ணங்கள் பற்றியும் இந்நிறுவனம் அறிவி்த்துள்ளது.

கிழே உங்களுக்காக பிரீமியர் ஈவன்ட் 2013ல் புதுமையான சிறப்பம்சங்களுடன் வெளியான சாம்சங்கின் படைப்புகளை பற்றிய படங்கள்.

Click Here For New Samsung Gadgets Gallery

ஹைபிரிட் ஏடிஐவி Q

ஹைபிரிட் ஏடிஐவி Q

ஆன்டிராய்ட் ஜெல்லி பீன் மற்றும் வின்டோஸ்8 ஓஎஸ் உடன் இயங்கக் கூடிய ஏடிஐவி Q 3200 x 1800 qHD+ ரெசல்லுயுசன் டிஸ்பிளே கொண்டது. இதன் திரையின் அளவு 13.3 இன்ஞ் ஆகும். இது இண்டெல் ஐ5 பிராசஸரில் இயங்கக்கூடியது. இதனை டேப்லெட் மற்றும் லேப்டாப்பாகவும் இயக்கலாம்.

ஏடிஐவி டேப்3

ஏடிஐவி டேப்3

ஏடிஐவி டேப்3 திரையின் அளவு 10.1 இன்ஞ் ஆகும். இது வின்டோஸ்8 ஓஎஸ்ல் இயங்கக்கூடியது. இதில் Z2760 ஆட்டம் மற்றும் 2ஜிபி ராம்(RAM) உள்ளது. இதன் எடை 550 கிராம் ஆகும். ஏடிஐவி டேப்3யின் விலை Rs. 41,590

ஏடிஐவி புக் 9 பிளஸ்

ஏடிஐவி புக் 9 பிளஸ்

ஏடிஐவி புக் 9 பிளஸ் 13.3 இன்ஞ் 3200 x 1800 qHD+ ரெசல்லுயுசன் மல்டி டச் டிஸ்பிளே கொண்டது. இது இண்டெல் கோர் ஐ5 மற்றும் ஐ7 பிராசஸரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ராம் மற்றும் 256ஜிபி ஹாட் டிஸ்க் உள்ளது. இதன் எடை 1.39 கிலோ கிராம் ஆகும்.

ஏடிஐவி புக் 9 லைட்

ஏடிஐவி புக் 9 லைட்

ஏடிஐவி புக் 9 லைட் 13.3 இன்ஞ் 1366 x 768 டச் டிஸ்பிளே கொண்டது. இதில் 4ஜிபி ராம் மற்றும் 256ஜிபி ஹார்ட் டிஸ்க் உள்ளது. இது 1.4GHz கூவாட் கோர் பிராசஸரில் இயங்கக்கூடியது.

கேலக்ஸி என்எக்ஸ்(NX)

கேலக்ஸி என்எக்ஸ்(NX)

கேலக்ஸி என்எக்ஸ் கேமரா 4.8 இன்ஞ் டச் ஸ்கிரீன் கொண்டது. இதில் 1.6GHz கூவாட் கோர் பிராசஸர் மற்றும் 20.3 மெகாபிக்சல் கேமரா உள்ளது. கேலக்ஸி என்எக்ஸ்
ஆன்டிராய்ட் ஓஎஸ்ல் இயங்கக்கூடியது. இதில் 2ஜிபி ராம், 3டி லென்ஸ் மற்றும் 16ஜிபி மெமரி உள்ளது. இதன் விலை Rs. 59,710.

கேலக்ஸி எஸ்4

கேலக்ஸி எஸ்4

சாம்சங் கேலக்ஸி எஸ்4ன் மயக்கும் பல வண்ணங்கள்.

ஏடிஐவி ஒன் 5 ஸ்டைல்

ஏடிஐவி ஒன் 5 ஸ்டைல்

ஏடிஐவி ஒன் 5 ஸ்டைல் 21.5 இன்ஞ் மெட்டாலிக் ஒயட் கலருடன் வந்துள்ளது. இது 1080p டச் ஸ்கிரீன் டிஸ்பிளே உடையது. இதில் 4ஜிபி ராம், 1டிபி ஹார்ட் டிஸ்க் உள்ளது. ஏடிஐவி ஒன் 5 ஸ்டைல் வின்டோஸ்8 உடன் வர உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X