சகல வசதிகளுடன் 7 இஞ்சுக்கு புதிய டேப்லெட்: சாம்சங் அறிமுகப்படுத்துகிறது

எளிதாக கையாளும் வகையில் இருக்கவேண்டும். அதேவேளை, அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்றதாக வெறும் 7 இஞ்ச் மட்டுமே கொண்டதாக இந்த டேப்லெட்டை வடிவமைத்துள்ளது சாம்சங்.
ஆன்ட்ராய்டு 2.2 ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த புதிய டேப்லெட், 1024*600 பிக்செல் துல்லியம் கொண்ட சூப்பர் ஆமோ எல்இடி டிஸ்பிளேவுடன் வருகிறது.
தவிர, இந்த 7 இஞ்ச் டேப்லெட்டில் இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யவும் சாம்சங் திட்டமிட்டுள்ளது. இதில், ஒன்று வைஃபை மற்றும் 3ஜி வசதியுடனும் மற்றொன்று வைஃபை வசதியுடன் மட்டும் கொண்டதாக வருகிறது..
இந்த தொடர்பு வசதிகள் மூலம், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
இந்த புதிய டேப்லெட் இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும். முதன்மை கேமரா 3.0 மெகாபிக்செல் துல்லியம் கொண்டதாகவும், மற்றொன்று 1.3 மெகாபிக்செல் துல்லியத்துடன் வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.
தவிர, இதில் அப்லோடு செய்யப்பட்டிருக்கும் மீடியா ஹப் சாப்ட்வேர் மூலம், விரும்பிய திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.
புத்தங்கள் மற்றும் செய்தித்தாள்களை படிப்பதற்கு ஏதுவாக அமேஸான் இ-ரீடரும் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.
அலுவலக சம்பந்தமான பணிகளுக்கு ஏற்ற வகையில், எம்எஸ்-ஆபிசும், வீடியோ மற்றும் அனிமேஷன் படங்களை பார்க்க ஆடோப் ப்ளாஷ் ப்ளேயர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தகவல் பரிமாற்றத்திற்கு 3.0 வெர்ஷன் புளூடூத் இணைப்பு வசதி இருக்கிறது. வீடியோ ப்ளேயர், மியூசிக் ப்ளேயர் மற்றும் வீடியோ விளையாட்டுகளுக்கும் பஞ்சமிருக்காது.
எச்டிஎம்எல் சப்போர்ட்டுடன் இன்டர்நெட் வசதியை பெறலாம். இவை எல்லாவற்றுக்கும் சிறப்பான மின்மேலாண்மை தொழில்நுட்பத்துடன் ஆற்றல்வாய்ந்த பேட்டரியுடன் வருவதால் பேக்கப்பில் பிரச்னை இருக்காது.
பாக்கெட்டில் வைத்து எடுத்து செல்லும் வகையில் அளவில் மிக சிறியதாகவும், அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட இந்த புதிய டேப்லெட் ரூ.8,999 என்ற விலையில் உங்களை கரம் பிடிக்க வருகிறது.


Click it and Unblock the Notifications