13.3-இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம்.! விலை?
வைட் சார்கோல் மற்றும் கோரல் போன் நிறங்களில் இந்த லேப்டாப் மாடல் கிடைக்கிறது, மேலும் இந்த சாதனத்தில் ஆரம்ப விலை ரூ.52,360-ஆக உள்ளது.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் தற்சமயம் 13.3-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடைய ஃபிளாஷ் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்த லேப்டாப் மாடல் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பின்பு சாம்சங் ஃபிளாஷ் லேப்டாப் மாடல் இன்டெல் 802.11 ஏசி 2எக்ஸ்2 ஜிகாபிட் வயர்லெஸ் லென் கார்டு வசதியைக் கொண்டுள்ளது, எனவே இதனால் நொடிக்கு 1.7ஜிகாபைட் வேகம் சீராக இயங்கும்.மேலும் இநத் லேப்டாப் மாடலின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேடி கார்ப் மொபைல் நெட்வொர்க்
மைக்ரோசாப்ட் நிறவனத்துடன் இணைந்து மிக பாதுகாப்பான முறையிலும் பின்பு புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையிலும் இந்த லேப்டாப் மாடலை உருவாக்கியுள்ளது சாம்சங் நிறுவனம். பின்பு 13.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் கேடி கார்ப் மொபைல் நெட்வொர்க் சேவைகளுக்கென பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 இயங்குதளம்:
இந்த சாம்சங் ஃபிளாஷ் லேப்டாப் மாடல் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,பின்பு கைரேகை சென்சார், சாம்சங் ரகசிய ஃபோல்டர் கொண்டிருக்கும் இந்த சாம்சங் லேப்டாப்.

சேமிப்பு
சாம்சங் ஃபிளாஷ் லேப்டாப் பொறுத்தவரை சர்வதேச ஃபிளாஷ் ஸ்டோரேஜ் கார்டுகளை சப்போர்ட் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இது மைக்ரோ எஸ்.டி கார்டுகளை விட ஜந்து மடங்கு வேகமாக இருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது.

விலை:
வைட் சார்கோல் மற்றும் கோரல் போன் நிறங்களில் இந்த லேப்டாப் மாடல் கிடைக்கிறது, மேலும் இந்த சாதனத்தில் ஆரம்ப விலை ரூ.52,360-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications