கைரேகை ஸ்கேனர் வசதியுடன் சாம்சங் நோட்புக் ஸ்பின் (2018) அறிமுகம்.!
இந்த சாதனம் 360 கோணத்தில் வளைக்கக்கூடிய தொடுதிரை வசதி கொண்டுள்ளது, அதன்பின்பு 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5பிராசஸர் மற்றும் 8ஜிபி மெமரி உள்ளிட்டவை இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோட்புக் ஸ்பின் (2018) மாடலை சாம்சங் நிறுவனம் தற்சமயம் அமெரிக்காவில்அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த சாதனம் பொறுத்தவரை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வெளிவந்துள்ளது.
சாம்சங் நோட்புக் ஸ்பின் (2018) சாதனம் பொறுத்தவரை 256 ஜிபி எஸ்எஸ்டி டிரைவ் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கப்பட்டிருப்பதோடு லாக்இன் செய்ய விண்டோஸ் ஹெல்லோ மூலம் கைரேகை ஸ்கேனர் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:
சாம்சங் நோட்புக் ஸ்பின் (2018) சாதனம் பொதுவாக 13.3-இன்ச் முழு எச்டி பிளஸ் தொடுதிரை கொண்ட டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. அதன்பின்பு 18.5எம்எம் தடிமனாக இருக்கும் நோட்புக் 7 ஸ்பின் (2018) பொறுத்தவரை 1.53 கிலோ எடை கொண்டுள்ளது.

இன்டெல் கோர்:
இந்த சாதனம் 360 கோணத்தில் வளைக்கக்கூடிய தொடுதிரை வசதி கொண்டுள்ளது, அதன்பின்பு 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5பிராசஸர்
மற்றும் 8ஜிபி மெமரி உள்ளிட்டவை இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆக்டிவ் பென் சப்போர்ட்:
வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த ஆக்டிவ் பென் சப்போர்ட் இவற்றில் இடம்பெற்றுள்ளது, ஆனால் இதற்கு தனியே பணம் செலுத்த வேண்டும்.

ஸ்டூடியோ பிளஸ் :
சாம்சங் நோட்புக் ஸ்பின் (2018) சாதனத்தில் ஸ்டூடியோ பிளஸ் வசதி இடம்பெற்றுள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை கொண்டு மிக எளிமையாக திரைப்படங்களை உருவாக்க முடியும்.

இணைப்பு ஆதரவுகள்:
யுஎஸ்பி டைப்-சி, யுஎஸ்பி 3.0ஒ1, யுஎஸ்பி 2.0ஒ1இ, எச்டிஎம்ஐ எச்பிஃமைக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா:
இந்த சாதனம் தற்சமயம் அமெரிக்காவில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது, கூடிய விரைவில் மற்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications