ஷாக் கொடுத்த சாம்சங்.! கேட்டதோ ஸ்மார்ட்போனில், கிடைத்ததோ லேப்டாப்பில்.!
நிச்சயமாக இல்லை. இந்த போல்டபில் டிஸ்பிளே லேப்டாப் பற்றிய தகவலானது கம்பனிக்கு வெளியே இருந்து வந்த வதந்தியோ அல்லது கான்செப்ட்டோ இல்லை.
சந்தைக்குள் நடக்கும் போட்டி மற்றும் வியாபாரத்தில் முன்பின் இருந்தாலும், புதுமை மற்றும் கனவு அம்சங்களை அறிமுகம் செய்து இதர நிறுவனங்களை முந்திக்கொள்வதில், சாம்சங் - எப்போதுமே ஒரு முன்னோடி நிறுவனம் தான் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். மீறி சந்தேகம் கிளம்பினால், சாம்சங் நிறுவனத்தின் சமீத்திய அறிவுப்பு உங்களை ஆசுவாசப்படுத்தலாம்.
அப்படி என்ன அறிவிப்பு?
ஆம், தென் கொரிய நிறுவனமான சாம்சங் ஒரு மடங்கக்கூடிய (நெகிழ்வான) திரையை அதாவது போல்டபில் டிஸ்பிளேவை கூடிய விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக பிரகடனப்படுத்தி சந்தைக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் என்ன பரபரப்பு வேண்டியுள்ளது.?
சாம்சங் நிறுவனத்தின் போல்டப்பில் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களின் கான்செப்ட் புகைப்படங்கள் வெளியாவதும், பின்னர் அது பொய் ஆவதும் சாதாரணமான மற்றும் வழக்கமான விடயம் தானே? இதில் பரபரத்து போக என்ன வேண்டியுள்ளது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதிலை சாம்சங் நிறுவனமே கூறியுள்ளது. இம்முறை வெளியானது போல்டப்பில்டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் அல்ல. லேப்டாப்.

மடங்கக்கூடிய டிஸ்பிளே: சாம்சங் நிறுவனத்தின் பழம்பெரும் கனவு.!
ஃபோல்டபில் டிஸ்பிளே சார்ந்த பணிகள் தொடங்கி ஆண்டுகள் கடந்துவிட்டன. கூடிய விரைவில் மடங்கக்கூடிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்று வெளியாகுமென்று காத்துக்கிடந்த தொழில்நுட்ப மற்றும் ஸ்மார்ட்போன் பிரியரக்ளுக்கு "சின்னதாய் ஆசைப்படாதே, பெரிதாய் கேள்" என்று தன் செயலால் பதில் அளித்துள்ளது. அதாவது மடங்கக்கூடிய டிஸ்பிளே கொண்ட லேப்டாப் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுவும் கான்செப்ட் அல்லது லீக்ஸ் தகவலாக இருந்தால்?
நிச்சயமாக இல்லை. இந்த போல்டபில் டிஸ்பிளே லேப்டாப் பற்றிய தகவலானது கம்பனிக்கு வெளியே இருந்து வந்த வதந்தியோ அல்லது கான்செப்ட்டோ இல்லை. இது சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஒரு அதிகாரப்பூர்வமான தகவலாகும். வெளியான தகவலின்படியும், சாம்சங் நிறுவனத்தின் படியும், இந்த லேப்டாப் ஆனது நிச்சயமாக ஒரு தனிப்பட்ட தயாரிப்புகளில் ஒன்றாக இருக்கும்.
தென் கொரிய நிறுவனமான சாம்சங்கின் பிசி மார்க்கெட்டிங் பிரிவின் துணைத் தலைவரான லீ மின்கோலின் கருத்துப்படி, "போல்டபில் ஸ்மார்ட்போன்கள் போலவே, தென் கொரிய நிறுவனமான சாம்சங், டிஸ்பிளே உற்பத்தியாளர்களுடன் இணைந்து மடங்கக்கூடிய மடிக்கணினி திரைகளையும் உருவாக்குகிறது. இவ்வகை லேப்டாப் ஆனது மாறிவரும் மார்க்கெட்டிங் போக்குகளின் மத்தியில், பயனருக்கு ஒரு புதிய மதிப்பு மற்றும் அனுபவத்தை உறுதி செய்யும்."
கெத்து காட்டுமா அல்லது பல்பு வாங்குமா?
சாம்சங் நிறுவனத்திற்கு மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு போல்டபில் டிஸ்பிளே கொண்ட லேப்டாப்பும் முக்கியம் தான். ஏனெனில் இவ்வகையான லேப்டாப்பை உருவாக்கும் முதல் நிறுவனம் சாம்சங் தான். வழக்கம் போல, கனவு அம்சத்தை வெளியிட்ட முதல் நிறுவனம் என்கிற பெயரை மட்டும் சாம்சங் தக்கவைத்துக்கொள்ள விரும்பாது, வியாபார ரீதியாகவும், செயல்திறன் பிரிவிலும் வெற்றி காண கடுமையாக உழைக்கும்.

சாம்சங் லேப்டாப்களின் சந்தை நிலவரம் தான் என்ன?
சாம்சங் நிறுவனத்தின் பிசி மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவரான லீ மின்கோலின் கருத்துப்படி, "தற்போது சாம்சங் மொத்தம் 3.2 மில்லியன் பெர்சனல் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்கிறது, முக்கியமாக கொரியா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அதிக அளவிலான விற்பனை நடக்கிறது. மற்ற மொபைல் சாதனங்களுடனான இணைப்புகளை அதிகரிப்பதில் பிசிக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே இன்டெல், மைக்ரோசாப்ட் மற்றும் கே டி போன்ற பங்குதாரர்களுடன் புதுமையான பிசிக்களை உருவாக்கும் பணிகளில் சாம்சங் களம் இறங்கி உள்ளது."
எப்போது வெளியாகும்? என்னென்ன அம்சங்களை எதிர் பார்க்கலாம்?
தென் கொரிய நிறுவனமான சாம்சங், கூறப்படும் மடங்க கூடிய லேப்டாப் பற்றிய விவரங்களை இன்னும் வழங்கவில்லை. அதற்காக அதை பற்றி சிந்திக்காமல் அல்லது ஆராயாமல் இருக்கவும் முடியாது. இந்த அறிவிப்பின் வாயிலாக நமக்கு கிடைத்துள்ள பொதுவான புள்ளிகளைப் பற்றி பேசுவோமானால், தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் முதல் நெகிழ்வான (போல்டபில்) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நிச்சயமாகும் பட்சத்தில் சாம்சங் அதே தொழில்நுட்பத்தை இதர சாதனங்களிலும் பயன்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனவே, இப்போதைக்கு, சாம்சங் நிறுவனத்திடம் இருந்து மற்றும் ஒரு அதிகாரபூர்வமான தகவல் வரும் வரை நாம் காத்திருந்து தான் ஆக வேண்டும்.

எப்போது வெளியாகும்? என்னென்ன அம்சங்களை எதிர் பார்க்கலாம்?
தென் கொரிய நிறுவனமான சாம்சங், கூறப்படும் மடங்க கூடிய லேப்டாப் பற்றிய விவரங்களை இன்னும் வழங்கவில்லை. அதற்காக அதை பற்றி சிந்திக்காமல் அல்லது ஆராயாமல் இருக்கவும் முடியாது. இந்த அறிவிப்பின் வாயிலாக நமக்கு கிடைத்துள்ள பொதுவான புள்ளிகளைப் பற்றி பேசுவோமானால், தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் முதல் நெகிழ்வான (போல்டபில்) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நிச்சயமாகும் பட்சத்தில் சாம்சங் அதே தொழில்நுட்பத்தை இதர சாதனங்களிலும் பயன்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனவே, இப்போதைக்கு, சாம்சங் நிறுவனத்திடம் இருந்து மற்றும் ஒரு அதிகாரபூர்வமான தகவல் வரும் வரை நாம் காத்திருந்து தான் ஆக வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, போட்டியாளர்களுக்கு ஷாக் தான்.!
சாம்சங் நிறுவனத்தின் பிரதான போட்டியாளரான ஆப்பிள் நிறுவனமானது, ஐபோன் எக்ஸ் தொடங்கி ஐபோன் எக்ஸ்எஸ் வரையிலாக தொடர்ந்து ஹை எண்ட் ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் நிலையில், சாம்சங் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஆனது போல்டபில் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனின் வருகையை உறுதிப்படுத்தியது மட்டுமின்றி, ஆப்பிள் மேக்புக்குகளுக்குமான எதிராளியையும் சேர்த்தே உறுதி படுத்தியுள்ளது. ஆகமொத்தம் இந்த சாம்சங் அறிவிப்பானது, சமீப காலமாக ஆப்பிள் பயனர்களை வெறுப்பேற்ற முடியாமல் தவித்து வந்த சாம்சங் (வெறியர்களுக்கு) வாடிக்கையாளர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ள அதே நேரதத்தில், போட்டி நிறுவனங்களின் வயிற்றையும் சற்றே கலக்கி உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications