Home
Computer

விரைவில் சாம்சங்கின் கலர்புல் 3 சீரிஸ் லேப்டாப்புகள்

By Super
விரைவில் சாம்சங்கின் கலர்புல் 3 சீரிஸ் லேப்டாப்புகள்
நாம் நடைமுறையில் பார்த்தால் ஒவ்வொரு ஐந்தாவது நபரும் சாம்சங்கின் தயாரிப்பான ஏதாவது மொபைலேயோ, ஸ்மார்போனையோ, லேப்டாப்பையோ அல்லது நோட்புக்கையோ வைத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு சாம்சங்கின் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

மேலும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் விதமாக புதிய அல்ட்ரா லேப்டாப்புகளை விரைவில் களமிறக்க இருக்கிறது சாம்சங். இந்த சாம்சங்கின் புதிய 3 சீரிஸ் லேப்டாப்புகள் கருப்பு, சிவப்பு, பர்ப்புள், சில்வர் மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது.

குறிப்பாக இது இளையோர்களுக்காகவே தயாரிக்கப் படுவதால் அதி நவீன தொழில் நுட்பத்துடனும் பக்காவான ஸ்டைலுடனும் வரும். குறிப்பாக இளையோரின் இதயங்களில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தும் என நம்பலாம்.

ஏற்கனவே கூறியது போல் இது 5 வண்ணங்களில் வருகின்றது. மேலும் இவற்றின் கீ பேடுகல் பல வண்ணங்களில் வந்து மிகவும் ரம்மியமாக இருக்கின்றன. அதனால் இதில் டைப் செய்வது சிறந்த அனுபவத்தைத் தரும். மேலும் இந்த லேப்டாப்புகள் மிகவும் எடை குறைந்தவை ஆகும். இதனால் மாணவர்கள் இதை எளிதாக எங்கும் எடுத்துச் செல்ல்லாம். குறிப்பாக இதிலுள்ள 350 யு மாடல் இளம் பெண்களின் ரசனைக்காகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றின் முக்கிய சிறப்பு அம்சங்களாகப் பார்த்தால் இது ஐ5 ப்ராசஸருடன் 640ஜிபி ஹார்ட் ட்ரைவ் சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. மேலும் இதன் 12.5 இன்ச் டிஸ்ப்ளே பிரதிபலிக்காத ஒன்றாகும். அதனால் இதைப் பார்ப்பதால் நமது கண்கள் கூசாது.

மேலும் இந்த பிரதிபலிக்காத டிஸ்ப்ளே தெளிவான காட்சிகளை தரக்கூடியது.மேலும் இதன் பேட்டரி 8 மணி நேரம் வரை தாங்கும் அளவிற்கு சக்தி கொண்டது. இதன் எடையைப் பார்த்தால் அது 1.3 கிலோவாகும். இப்போது கொரியாவில் அறிமுகமாகி இருக்கும் இந்த 3 சீரிஸ் லேப்டாப்புகள் இந்த வருட இறுதியில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். இதன் விலை ரூ.43,000 மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X