சாம்சங்கின் புதிய க்ரோம்புக் மற்றும் க்ரோம்பாக்ஸ்!

Posted By: Karthikeyan
சாம்சங்கின் புதிய க்ரோம்புக் மற்றும் க்ரோம்பாக்ஸ்!

சாம்சங் தனது புதிய க்ரோம்புக் மற்றும் க்ரோம்பாக்ஸ் ஆகியவற்றை விரைவில் களமிறக்க இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

க்ரோம்புக் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமானது. ஆனால் க்ரோம்பாக்ஸ் முற்றிலும் புதுமையானது. இதில் திரையை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும்.

சாம்சங்கின் புதிய க்ரோம்புக் 5550 வரிசை லேப்டாப்புகள் 12.1 இன்ச் திரை அளவுடன் வருகின்றன. மேலும் இந்த க்ரோம்புக்கில் இன்டல் கோர் ப்ராசஸர், ஜிகாபிட் எர்த்நெட், வைபை மற்றும் 3ஜி வயர்லஸ் வசதி போன்றவை உள்ளன. அதோடு நீடித்த இயங்கு நேரம் கொண்ட பேட்டரி, 4ஜிபி மெமரி, யுஎஸ்பி போர்ட்டுகள், 4 இன் 1 மெமரி ஸ்லாட், எச்டி வெப்கம், கென்சிங்டன் லாக் போர்ட் மற்றும் டிஸ்ப்ளே போர்ட்++ போன்ற வசதிகளையும் இந்த புதிய க்ரோம்புக் வழங்குகின்றன. வைபை மட்டும் கொண்ட க்ரோம்புக் 449 அமெரிக்க டாலர்களுக்கும், வைபை மற்றும் 3ஜி வசதி கொண்ட க்ரோம்புக் 549 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படும்.

சாம்சங் க்ரோம்பாக்ஸ் 3 வரிசை சாதனங்கள் மிகவும் சிறியவையாகும். இவற்றை மினி பிசிகள் என்று அழைக்கலாம். இந்த க்ரோம்பாக்ஸ் க்ரோம் இயங்குதளத்தை டெஸ்க்டாப்பிற்கு வழங்குகிறது. இந்த சிறிய கணினி இன்டல் கோர் ப்ராசஸருடன் 4ஜிபி மெமரியுடன் வருகிறது. அதோடு இதில் டூவல் பேன்ட் வைபை மற்றும் ஜிகாபிட் எர்த்நெட் போர்ட் ஆகிய வசதிகளும் உள்ளன.

இந்த க்ரோம்பாக்சில் 6 யுஎஸ்பி போர்ட்டுகளும், 2 டிஸ்ப்ளே போர்ட்++ ஜாக்குகளும், டிவிஐ மற்றும் ப்ளூடூத்தும் உள்ளதால் இதில் இணைப்பு வசதிகள் அபாரமாக இருக்கும். இந்த சிறிய க்ரோம்பாக்ஸ் பெரிய திரையில் க்ரோம் இயங்கு தளத்தை இயங்க வைக்கும். இதன் விலை 329 அமெரிக்க டாலர்களாகும்.

ஏற்கனவே க்ரோம் இயங்கு தளத்தில் இயங்கும் சாதனங்களைவிட இந்த க்ரோம்புக் மற்றும் க்ரோம்பாக்ஸ் ஆகியவை மிக வேகமாக இயங்கும். சாம்சங்கின் இந்த இரண்டு சாதனங்களும் இந்த வாரம் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இவை விற்பனையில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருத்திருந்து பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot