23இஞ்ச் மானிட்டருடன் புதிய சாம்சங் கம்ப்யூட்டர்

Posted By: Staff

23இஞ்ச் மானிட்டருடன் புதிய சாம்சங் கம்ப்யூட்டர்
மின்னனு தயாரிப்பில் எப்போதுமே சாம்சங் நிறுவனம் உச்சத்தில் இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களை திறமையாக திருப்திபடுத்தும் சக்தியை சாம்சங் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் அவற்றின் தரமான படைப்புகளும் அதன் நியாயமான விலையும் ஆகும்.

குறிப்பாக தற்போது சாம்சங் புதிதாக சீரிஸ் 1 ஆல் இன் ஒன் என்ற பெயரில் புதிய கம்ப்யூட்டரை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறது. முதலில் அமெரிக்காவில் இதனை அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது. பின்னர் மற்ற நாடுகளிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசி சாம்சங்கின் இணையற்ற படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசியின் டிசைனைப் பார்த்தால் அது அலுமினிய பேனலைக் கொண்டிருக்கிறது. இதன் கருப்பு திரை பார்ப்பதற்கு மிக பக்காவாக இருக்கிறது. இதன் 23 இன்ச் டிஸ்ப்ளே மிகவும் மெல்லியதாகும். இதன் ரிசலூசன் 1920X1080 ஆகும். மேலும் இது எல்எடி பேக்லிட் வசதியும் கொண்டிருக்கிறுது. மேலும் இதன் திரை தொடு வசதியும் கொண்டது.

சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசி இண்டல் கோர் ஐ5 ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் செயல் திரன் மிக பக்காவாக இருக்கும். மேலும் இது 8ஜபி ரேம் கொண்டிருப்பதால் இதன் வேகமும் சீராக இருக்கும். இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் ஆகும். மேலும் ப்ளூடூத் மற்றும் வைபை வசதியும் இதில் சிறப்பாக உள்ளது.

சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசி ஆப்டிக்கல் ட்ரைவ் மற்றும் 1டிடிபி ஹார்ட் ட்ரைவும் கொண்டுள்ளது. இது 4 வாட்ஸ் கொண்ட 2 ஹர்மான் ஸ்பீக்கர்களைக் கொண்டிருப்பதால் இதில் இசை கேட்பதும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும். மேலும் இது யுஎஸ்பி 2.0 மற்றும் யுஎஸ்பி 3.0 போர்ட்டுகளையும் கொண்டுள்ளன.

அதுபோல் இதன் 1.3 மெகா பிக்சல் கேமரா தரமான படங்களையும் வழங்குகிறது. இந்த புதிய படைப்புக்கு 1 வருட உத்திரவாதமும் வழங்கப்படுகிறது. மேலும் இதில் சேண்டி பிரிட்ஜ் பவர் தொழில் நுட்பமும் உள்ளது.

சீரிஸ் 1 ஆல் இன் ஒன் பிசியின் விலையைப் பார்த்தால் ரூ.40,000ஆகும். ஆனால் இதன் டாப் என்ட் மாடல் ரூ.49,000க்கு விற்கப்படும். இந்த புதிய டிவைஸ் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதிக்கு பின் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்