2 புதிய டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தும் சாம்சங்!

Posted By: Karthikeyan
2 புதிய டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தும் சாம்சங்!

கடந்த மாதம் நடைபெற்ற நுகர்வோர் கண்காட்சியை மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அந்த கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்கள் சாம்சங் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் அந்த எதிர்பார்ப்பு இந்த மாதம் பர்சலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் பக்கம் திரும்பிவிட்டது. அதிலும் குறிப்பாக தொழில் நுட்ப உலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் வந்திருக்கும் செய்தி என்னவென்றால் சாம்சங் நிறவனம் தனது 2 புதிய டேப்லெட்டுகளைஉலக மின்னணு சாதன கண்காட்சியில் என்பதாகும். இந்த டேப்லெட்டுகள் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கும். மற்ற அம்சங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

ஆனால் அமிப்ளோ.ஜேபி என்ற ஜப்பானிய இணையதளம் இந்த புதிய சாம்சங் டேப்லெட்டுகளைப் பற்றியத் தகவல்களை கசியவிட்டிருக்கிறது. அதன்படி இந்த டேப்லெட்டுகளின் பெயர்கள் ஜிடி-பி3100 மற்றும் ஜிடி-பி500 ஆகும். இந்த இரண்டுமே வைபை சான்று பெற்ற டேப்லெட்டுகள் ஆகும். மேலும் இந்த டேப்லெட்டுகள் சாம்சங் கேலக்சி டேப் வரிசையில் வருகின்றன.

அதோடு இந்த டேப்லெட்டைப் பற்றிய பல உறுதியில்லாத தகவல்கள் வருகின்றன. இந்த டேப்லெட்டுகள் மிகக் குறைந்த விலையில் வரும். அதனால் இது அமேசான் கின்டில் பயருக்கு சரியான போட்டியாக இருக்கும் என்கின்றனர் ஒரு சிலர்.

மேலும் ஒரு சிலர் இந்த டேப்லெட் 2560 x 1600 பிக்சல் ரெட்டினா ட்ஸ்ப்ளேயும் 2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரும் கொண்டிருக்கும் என்கின்றனர் ஒரு சிலர். யார் சொல்வது உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்.

இந்த சாம்சங் டேப்லெட்டுகளின் விலை ரூ.15,000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்காக உலக மொபைல் காங்கிரஸ் வரை எல்லோரும் காத்திருக்க வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot