மடிக்கக்கூடிய லேப்டாப்பை வெளியிடும் சாம்சங்..!

பல வருட முயற்சிக்கு பின்னர் மடிக்கக்கூடிய திரையை கொண்ட முதல் போன் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.

|

சமீபத்தில் தென்கொரியாவை சேர்ந்த பிரபல மின்னணு நிறுவனமான சாம்சங் நெகிழ்வுத்தன்மை கொண்ட திரை உள்ள கருவியை வெளியிடப்போவதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளது. பல வருட முயற்சிக்கு பின்னர் மடிக்கக்கூடிய திரையை கொண்ட முதல் போன் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.

மடிக்கக்கூடிய லேப்டாப்பை வெளியிடும் சாம்சங்..!

அதுமட்டுமின்றி இதே போன்ற திரைகொண்ட முதல் லேப்டாப்பை விரைவில் தயாரிக்கவுள்ளதாக கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது சாம்சங் நிறுவனம். அதாவது எளிதில் புரியும் வகையில் கூறவேண்டுமென்றால், சாம்சங் நிறுவனம் நெகிழ்வான திரை கொண்ட மடிக்கக்கூடிய லேப்டாப்பை கட்டமைத்துவருகிறது.


இந்த தகவல் வதந்தியும் அல்ல, நிறுவனத்திற்கு வெளியே இருந்து வந்த தகவலும் அல்ல. ஆம். தென்கொரியாவைச் சேர்ந்த மிகப்பெரிய மின்னணு நிறுவனமான சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளது தகவல். சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, லேப்டாப் சந்தையை மாற்றும் முன்பு தனிநபர் பயன்படுத்தும் கருவிகளில் புதுமைகளை புகுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இது இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மடிக்கக்கூடிய லேப்டாப்பை வெளியிடும் சாம்சங்..!

சாம்சங் நிறுவனத்தின் பி.சி மார்க்கெட்டிங் பிரிவின் துணைத்தலைவர் லீ மின்-சியோல் கூறுகையில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை போலவே, சாம்சங் நிறுவனம் திரை தயாரிப்பாளர்களுடன் இணைந்து மடிக்கக்கூடிய திரை கொண்ட லேப்டாப்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அது மடிக்கக்கூடியதாக மட்டும் இல்லாமல், பயனர்களுக்கு புதிய அனுபவத்தையும், மதிப்பையும் தரவல்லது. அதேநேரம் லேப்டாப் சந்தையின் டிரெண்டை மாற்றக்கூடியது.

சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய போன்களுடன், உலகின் முதல் நெகிழ்வுத்திரை கொண்ட லேப்டாப்பை உருவாக்கி சாதனைபடைக்கவுள்ளது முக்கியமான ஒன்றாகும். மின்னணு சந்தையில் மற்ற தொழில்நுட்ப கருவிகளை ஒப்பிடும் போது லேப்டாப்பிற்கான மவுசு சற்று குறைவாக உள்ளதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு, "சாம்சங் நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 3.2மில்லியன் கணிணிகளை விற்கிறது. அதிலும் குறிப்பாக கொரியா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவில். இது மொத்த கணிணி சந்தையின் 45% ஆகும். மற்ற மொபைல் கருவிஙளுடன் இணைப்பை ஏற்படுத்துவதிலும் கணிணிகள் முக்கிய பங்காற்றுவதால், எங்களது பார்ட்னர்களான இன்டெல், மைக்ரோசாப்ட் மற்றும் கே.டி உடன் இணைந்து

இது போன்ற புதுமையான கணிணிகளை தொடர்ந்து உருவாக்குவோம் என குறிப்பிட்டார்.

மடிக்கக்கூடிய லேப்டாப்பை வெளியிடும் சாம்சங்..!
சாம்சங் நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதாக கூறியுள்ளது. அதேநேரம் இந்த தொழில்நுட்பத்தை மற்ற கருவிகளிலும் பயன்படுத்த வேண்டும் என எண்ணுகிறது. வேறு எந்தவகையில் புதுமையை புகுத்தவுள்ளது சாம்சங் நிறுவனம் என பொறுத்திருந்து பார்ப்போம்.
Best Mobiles in India

English summary
Samsung To Launch A Foldable Laptop With Flexible Display: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X