Home
Computer

இந்திய சந்தையில் புதிய அல்ட்ராபுக்கைக் களமிறக்கும் சாம்சங்

By Karthikeyan
இந்திய சந்தையில் புதிய அல்ட்ராபுக்கைக் களமிறக்கும் சாம்சங்

கணினித் துறையில் முத்திரை பதித்து வரும் சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு புதிய அல்ட்ராபுக்கைக் களமிறக்க இருக்கிறது. இந்த அல்ட்ராபுக் சாம்சங்கின் 2ஜி 9 வரிசை குடும்பத்திலிருந்து வர இருக்கிறது. இந்த லேப்டாப்பிற்கு என்பி900எக்ஸ்3சி-எ01ஐஎன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப்பைத் தயாரிக்க 33,000 மணி நேரம் செலவிட்டதாக சாம்சங் கூறியிருக்கிறது.

இந்த புதிய 9 வரிசை லேப்டாப் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 13.3 இன்ச் எல்இடி டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. இன்டல் ஐ7 சிபியு மற்றும் 4ஜிபி டிடிஆர்3 ரேம் கொண்டிருப்பதால் இந்த லேப்டாப் தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.

இந்த அல்ட்ராபுக் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் இயங்கு தளத்தில் இயங்கும். இந்த லேப்டாப் 256ஜிபி எஸ்எஸ்டி மற்றும் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 4000 ஆகியவைக் கொண்டிருப்பதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளை மிக அருமையாகச் செய்ய முடியும்.

இந்த அல்ட்ராபுக்கில் 3 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளதால் இந்த லேப்டாப்பில் இனிமையான பாடல்களையும் கேட்க முடியும். மேலும் இந்த லேப்டாப்பில் 1.3எம்பி வெப்காம், இன்டர்னல் மைக், டூவல் சேனல் வைபை, ப்ளூடூத், ஜிகாபைட் எர்த்நெட் லேன், விஜிஎ அவுட், மைக்ரோ-எச்டிஎம்ஐ, ஹெட்போன், மைக் கோம்போ, யுஎஸ்பி, எஸ்டி, எஸ்டிஎச்சி, எஸ்டிஎக்ஸ்சி கார்டு ஸ்லாட் போன்ற எல்லா வசதிகளையும் பார்க்கலாம்.

அதுபோல் இந்த லேப்டாப்பில் பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தை வழங்கும். மேலும் இந்த லேப்டாப்பில் ஒஎஸ், சாம்சங் சப்போர்ட் சென்டர், எம்எஸ் ஆபிஸ் ஸ்டார்ட்டர் 2010, வொய்ல்டு டான்ஜென்ட் கேம் கன்சோல், விண்டோஸ் லைவ், ஈசி பைல் ஷேர், சைபர் லிங் யுகாம், ஈசி மைக்ரேசன், ஈசி செட்டிங்க்ஸ், சாப்ட்வேர் லான்சர், ஈசி சப்போர்ட் சென்டர் மற்றும் பாஸ் ப்ரவுசிங் போன்ற சாப்ட்வேர்கள் உள்ளன.

இந்த லேப்டாப் ரூ.1,03,000க்கு விற்கப்பட இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X