Home
Computer

கூகுளுடன் இணைந்து நெக்ஸஸ் போன் தயாரிப்பில் சாம்சங்

By Super
கூகுளுடன் இணைந்து நெக்ஸஸ் போன் தயாரிப்பில் சாம்சங்
சாம்சுங் நிறுவனம் உலக அளவில் வர்த்தக உறவை வைத்திருக்கிறது. அதன்மூலம், கூகுளோடு இணைந்த புதிய நெக்ஸஸ் மொபைலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய நெக்ஸஸ் போன் அதிநவீன தொழில்நுட்பத்துடனும் புதிய ஓஎஸ் கொண்டு ஆன்ட்ராய்டு போனாக இருக்கும்.

இந்த புதிய மொபைலை சாம்சுங் கூகுளுக்காகவே தயாரிக்க இருக்கிறது. இதற்காகவே இதன் புதிய தொழில்நுட்பத்தை யாரும் வெளியிடக்கூடாது என்பதற்காக சீஸ் மற்றும் டெஸிஸ்ட் என்ற வக்கீல் அறிக்கையை வழங்கியிருக்கிறது. இதன் மூலம் புதிய மொபைல் உற்பத்தியில் எந்த அளவு சாம்சுங் தீவிரம் காட்டுகிறது என அறிந்து கொள்ளலாம்.

நெக்சஸ் அல்லது கூகுள் போன்கள் எப்பொழுதுமே எந்த வித நிறுவனத்தின் தலையீடு இல்லாமல் தனித்துவமாக இருக்கும். இந்த புதிய மொபைலுக்கு நெக்சஸ் ப்ரைம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அது அவர்கள் வெளியிட்ட தகவலில் தெளிவாக உள்ளது.

இதற்கு முன் நெக்சஸ் போன்களை எல்ஜி நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இதற்கு முந்தைய நெக்சஸ் போன்களை எச்டிசியும் சாம்சுங்கும் உற்பத்தி செய்தன. அதாவது ஹச்டிசி நெக்சஸ் ஒன் என்ற மொபைலையும் சாம்சுங் நெக்சஸ் என்ற மொபைலையும் உற்பத்தி செய்தது. அதனால் புதிய மொபைலை எல்ஜி நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் மீண்டும் சாம்சுங் தயாரிக்கவிருக்கிறது என்பது உறுதியாயிருக்கிறது.

அதற்கும் இந்த புதிய மொபைலப் பற்றி இணையதளத்தில் ஏராளமான செய்திகள் மற்றும் வதந்திகள் வந்துவிட்டன. இதில் முக்கிய தகவல் என்னவென்றால் இந்த மொபைல் ஐஸ் க்ரீம் சான்ட்விச் ஓஎஸ் ஆன்ட்ராட்ய்டு 4.0 கொண்டிருக்கும் என்பதாகும். மேலும் சூப்பர் ஆமோலட் ஹச்டி திரை கொண்டிருக்கும் என்பது அடுத்த தகவலாகும். அதிக திறன் வாய்ந்த 1.5ஜிஹச்ஸட் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட் ப்ராஸஸர் மற்றும் சாம்சுங் டூவல் கோர் யூனிட் கொண்டிருக்கும் என்பது அடுத்த தகவலாகும்.

அதே போல் மற்ற வசதிகளை எடுத்துக் கொண்டால் பேஸியல் ரிக்கக்னைசன் சாப்ட்வேர், வயர்லஸ் சார்ஜ்க்காக க்யூஐ இன்டக்டிவ் ஜார்ஜிங் மற்றும் கூகுள் மானிட்டர் ப்ரோட்டோ கால் மற்றும் எபிஐகளுக்கான ஆண்ட்ராய்ட் @ ஹோம் போன்ற வசதிகளும் இதில் இருக்கும் பலவிதமான தகவல்கள் வருகின்றன. எது உண்மை எது உண்மையில்லை என்பது வந்த பின்தான் தெரியும். அதுவரை காத்திருப்போம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X