புதிய தொழில் நுட்பத்துடன் வரும் சாம்சங் கேலக்ஸி டேப்7 ப்ளஸ்

By Super
|
புதிய தொழில் நுட்பத்துடன் வரும் சாம்சங் கேலக்ஸி டேப்7 ப்ளஸ்
சாம்சங் நிறுவனம் தனது தரமான கணனி, டேப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்கள் மூலம் சந்தையில் ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கிறது. தற்போது அது சாம்சங் கேலக்ஸி டேப் 7 என்ற புதிய டேப்லட்டை அறிமுகப்படுத்துகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி டேப் 7 சாம்சங்கின் பழைய கேலக்ஸி டேப் 10.0ன் அப்க்ரேட் ஆகும். சாம்சங் கேலக்ஸி டேப் 7ல் பழைய கேலக்ஸி டேப்லட்டில் இருந்ததைவிட அதிகமான நவீன வசிதகள் ஏராளமாக உள்ளன. சாம்சங் கேலக்ஸி டேப் 7 போர்ட்டபுள்ளாகும் அதே நேரத்தில் தரமான மல்டிமீடியா வசதிகளோடும் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் 7 பழைய காலக்ஸி டேப்லட்டைப் போன்றே கருப்பு நிறத்தில் வருகிறது. இது 7 இன்ச் எஸ்சிடி டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதன் ப்ராசஸர் 1.2ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ஆகும். இது எச்எஸ்பிஎ நெட்வொர்க்கால் சப்போர்ட் செய்யப்படுகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 3.2 ஹன் கோம் இயங்கு தளம் கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் 7 ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்கிறது. இதில் வீடியோ ப்ளேபேக்குடன் 1080பி உயர் டெபனிசனுடன் வருகிறது. அதுபோல் இதில் 720பி வீடியோ ரிக்கார்டிங் செய்ய முடியும். மேலும் இது எம்பி3 மற்றும் டபுள்யுஎம்எ போன்ற ஆடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்யும்.

சாம்சங் கேலக்ஸி டேப் 7 எல்இடி ப்ளாஷ் தொழில் நுட்பம் கொண்ட 3 மெகா பிக்சல் ரியர் கேமராவைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 2 மெகா பிக்சல் முகப்பு கேமராவும இதில் உண்டு.

சாம்சங் கேலக்ஸி டேப் 7 ப்ளூடூத், வைபை மற்றும் யுஎஸ்பி இணைப்பையும் கொணடிருக்கிறது. அதுபோல் அக்ஸிலரோமீட்டர் டிஜிட்டல் கம்பேஸ் மற்றும் ஆம்பியன் லைட் போன்றவற்றையும் கொண்டுள்ளது. இதன் ரேமா 1ஜிபி ஆகும். இதன் இண்டர்னல் மெமரி 32ஜிபி ஆகும்.

இது மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டுள்ளதால் இதன் மெமரியை விரிவுபடுத்த முடியும். இந்த மைக்ரோஎஸ்டி கார்டின் அளவு 32ஜிபி ஆகும். இந்த டேப்லட்டின் மொத்த எடை 345 கிராம் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி டேப் 7 சாம்சங் அப்ளிகேசன்கள், அடோப் ப்ளாஷ் மற்றும் டாக்குமென்ட் எடிட்டர் போன்ற வசதிகளும் உள்ளன. மேலும் இதில் ஜிமெயில் யுடியூப், கூகுள் டாக் மற்றும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் கொண்டு வருகின்றன.

அதுபோல் சோஷியல் ஹப், ரீடர்ஸ் ஹப் மற்றும் மீயூசிக் ஹப் சேவைகளையும் இது வழங்குகிறது. இறுதியாக ஹெட்செட் இல்லாமலேயே வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யும் சப்போர்ட்டையும் வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் 7ன் விலை ரூ.21000 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X