Home
Computer

சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் கேலக்ஸி டேப்-2 விற்பனை!

By Super

சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் கேலக்ஸி டேப்-2 விற்பனை!
எலக்ட்ரானிக் சாதன உலகில் அதிக சாதனைகளை படைத்து வரும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப்-2 என்ற டேப்லட்டை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது.

இந்த டேப்லட்டை இப்போது சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் ப்ரீ-புக்கிங்கில் பெறலாம். ப்ரீ-புக்கிங் செய்யும் அளவிற்கு இதில் உள்ள முக்கிய தொழில் நுட்ப அம்சங்களையும் பார்ககலாம்.

ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆரப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சாம்சங் நிறுவனத்தின் முதல் டேப்லட், கேலக்ஸி டேப்-2 என்ற பெருமையையும் தட்டி செல்கிறது இந்த டேப்லட். ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் இந்த டேப்லட் 7 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொண்டது.

இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லட் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் வழங்கும்.

344 கிராம் எடை கொண்ட இந்த டேப்லட் 4,000 எம்ஏஎச் பேட்டரி வசதியினை கொடுக்கும். இதன் மெமரி வசதியினை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள இதன் மைக்ரோஎஸ்டி கார்டும் சப்போர்ட் செய்யும். இந்த கேலக்ஸி டேப்-2 டேப்லட்டை இந்தியாவில் பெற இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப்-2 டேப்லட்டை ஆன்லைனில் ரூ.23,250 விலைக்கு ப்ரீ-புக்கிங் செய்யலாம். இ-மயில் ஐடி, மொபைல் எண், பெயர், முகவரி போன்ற விவரத்தினை பூர்த்தி செய்வதன் மூலம் எளிதாக இந்த கேலக்ஸி டேப்-2 டேப்லட்டினை ப்ரீ-புக்கிங் செய்யலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X