லேட்டானாலும் லேட்டஸ்ட் வசதிகளுடன் சாம்சங் கேலக்ஸி டேப் 2!

By Karthikeyan
|
 லேட்டானாலும் லேட்டஸ்ட் வசதிகளுடன் சாம்சங் கேலக்ஸி டேப் 2!

சாம்சங் வட்டாரத்திலிருந்து இப்போது ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது. சாம்சங் வெளியிடவிருக்கும் புதிய கேலக்ஸி டேப் 2 மாடல்கள் சந்தைக்கு வர கால தாமதம் ஆகும் என்பதாகும். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது. அதாவது கேலக்ஸி டேப் 2 மாடல்கள் ஏப்ரல் இறுதியில் யுகேயில் கண்டிப்பாக வந்துவிடும் என்று சாம்சங் அறிவித்திருக்கிறது.

முதலில் சாம்சங் குறைந்த விலையில் கேலக்ஸி டேப் 2 (7.0) மற்றும் கேலக்ஸி டேப் (10.1) போன்ற மாடல்களை கடந்த மார்ச் மாதம் களிமிறக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால் முடியவில்லை. ஏனெனில் இந்த புதிய கேலக்ஸி டேப் 2 மாடல்களில் இன்னும் பல தொழில் நுட்ப வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அதைப் பற்றிய விவரத்தை சாம்சங் தெளிவாக அறிவிக்கவில்லை. ஆனால் சாம்சங் ரசிகர்கள் இந்த புதிய சாதனத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாம்சங் கேலக்ஸி 2 மாடல்கள் மேம்பட்ட தரத்துடன் வர இருக்கிறன. குறிப்பாக உயர்ந்த ரிசலூசனுடன் 7 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வரும் கேலக்ஸி டேப் 2 (7.0) 3ஜி வசதி, வைபை போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும். மேலும் இதன் எடை 345 கிராம் மட்டுமே.

அடுத்ததாக டேப் 2 (10.1) டேப்லெட்டும் 3ஜி மற்றும் வைபை வசதியுடன் 10.1 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. மேலும் இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே 1 ஜிஹெர்ட்ஸ் டூவல்கோர் ப்ராசஸர், பின்பக்க மற்றும் முகப்பு கேமராக்கள், 32ஜி வரை விரிவுசெய்யக்கூடிய மெமரி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு துவாரம் போன்ற வசதிகளுடன் வருகின்றன. அதனால் இவை மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் இவற்றின் செய்திறனும் பக்காவாக இருக்கும்.

இந்த டேப்லெட்டுகள் குறைந்த விலையில் வருவதால் கால தாமதம் ஆனாலும் பொறுத்திருக்க தயாராக இருக்கிறார்கள் சாம்சங் ரசிகர்கள்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X