இந்த வாரம் அறிமுகமாகிறது புதிய சாம்சங் கேலக்ஸி டேப்?

Posted By: Staff
இந்த வாரம் அறிமுகமாகிறது புதிய சாம்சங் கேலக்ஸி டேப்?
கெட்ஜெட் உலகில் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் பெரிய செய்தி, சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி டேப் 11.6 இன்ச் டேப்லெட்டை வெகு விரைவில் அறிவிக்க இருக்கிறது என்பதாகும். குறிப்பாக வரும் 18ந் தேதிக்குள் இப்போது ஆஸ்டின் டெக்ஸாசில் நடைபெறும் எஸ்எக்ஸ்எஸ்டபுள்யு கான்பரன்சில் இந்த அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.

ஆனால் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் பற்றி எந்த விதமான அதிகாரப்பூர்வமான தகவலும் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் சாம்சங்கின் அதிகாரிகள் டெக்ஸாசில் நடைபெறும் எஸ்எக்ஸ்எஸ்டபுள்யு நிகழ்வில் இது பற்றிய அறிவிப்பு வரும் என்று கூறி இருந்தனர். அதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த புதிய டேப்லெட்டைப் பற்றிய தகவல்கள் வராத நிலையில் இதன் தொழில் நுட்பங்களைப் பற்றிய தகவல்களும் இன்னும் முழுமையாக வரவில்லை. ஆனாலும் சாம்சங்கின் கடந்த கால வரலாற்றை வைத்து ஓரளவு புதிய டேப்லெட்டின் தொழில் நுட்பங்களை எதிர்பார்க்கலாம்.

இந்த டேப்லெட் 2560 x 1600 பிக்சல் ரிசலூசன் கொண்ட 11.6 இன்ச் திரையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன்களில் இருக்கும் ரெட்டினா டிஸ்ப்ளே இந்த சாம்சங்கின் புதிய டேப்லெட்டிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் விலையும் மிக அதிகமில்லாமல் இருக்கும் என்று தெரிகிறது.

சாம்சங்கின் புதிய டேப்லெட் எக்சிநோஸ் 5250 சிப்செட்டைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதுபோல் இதன் சிபியு 2 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகத்தைக் கொண்டிருக்கும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்