சாம்சங் கேலக்ஸி S4: இந்த குறைந்தவிலை டேப்லட் 2013ல் வருகிறது

Posted By: Staff

சாம்சங் கேலக்ஸி S4: இந்த குறைந்தவிலை டேப்லட் 2013ல் வருகிறது
சாம்சங் ரசிகர்கள்கேலக்ஸி S3யை வாங்குவதிலோ, நோட் 2வை வாங்குவதிலோ முனைப்புடன் இருக்கும் நிலையில் அவர்களுக்காக மற்றுமொரு புதிய தகவல் இங்கே.
அதானது,சாம்சங் கேலக்ஸி S3யின் பிரமாண்ட விற்பனையை தொடர்ந்து,சாம்சங் நிறுவனம்கேலக்ஸி S4யை வெளியிடபோவதாக பல வதந்திகள் வெளியானவண்ணம் உள்ளன. இந்நிலையில், இன்று சாம்மொபைல் என்ற தளம்கேலக்ஸி S4யை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.கேலக்ஸி S4, 2013ல் வெளியாகுமென்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது. மேலும்கேலக்ஸி நோட் 2வும் வெளியாகுமென கூறப்படுகிறது.
அறிக்கையின்முழுவிவரங்களும் இங்கே:
சாம்சங் கேலக்ஸி S4: அந்த அறிகயின்படிகேலக்ஸி S4, வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகுமென்றும் இதற்கு "ப்ராஜெக்ட் A" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய வதந்திகளைப் பொறுத்தவரையில் இந்தகேலக்ஸி S4ல் HD AMOLED திரை,குவாட்கோர் CPU,ஆன்ட்ராய்டுஜெல்லி பீன் இயங்குதளம், 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் திரையின் அளவு 5 இருக்கலாம்.
கேலக்ஸி நோட் 2: அதே சமயம் சாம்சங் நிறுவனம் விலைகுறைந்தகேலக்ஸி நோட் 2வை வெளியிடலாம். இந்த புதியகேலக்ஸி நோட் 2வுக்கு இது உரிய பெயர் அல்ல. இருந்தாலும் சாம்சங் நிறுவனம்கேலக்ஸி நோட் 2வின் நுட்பக்கூறுகளை குறைத்து ஐரோப்பாவில் வெளியிடுமென தெரிகிறது. இந்த புதிய சாதனம் அழகான வடிவமைப்புடன் இல்லாமலோ அல்லது AMOLED தொழில்நுட்பம் இல்லாமலோ இருக்கலாம்.
புதிய சாம்சங் டேப்லட்: இந்த புதியசாம்சங் டேப்லட் கண்டிப்பாக ஆசஸ் ட்ரான்ஸ்பர்மருக்கு போட்டியாக இருக்கு. இந்தடேப்லடை 13" அளவிலும் QWERTY டாக் என்ற தொழில்நுட்பத்திலும் வெளியிடசாம்சங் விரும்புகிறது. இதில் குரோம் ஒஸ் இருக்குமா அல்லதுஆன்ட்ராய்டு இயங்குதளமிருக்கா என்பது குறிப்பிடப்படவில்லை.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot