ரூ.40,300-விலையில் சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன லேப்டாப் மாடல் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?

|

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி க்ரோம்புக் 2 லேப்டாப் மாடலை ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் சிறந்த மென்பொருள் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த கேலக்ஸி க்ரோம்புக் 2 லேப்டாப் மாடல் ஆனது இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1920 x 1080 பிக்சல் தீர்மானம்

சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் 2 மாடல் ஆனது 13.3-இன்ச் QLED FHD டச் ஸ்கிரீன் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 1920 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

Celeron 5205U பிராசஸர் வசதி

இந்த லேப்டாப் மாடலில் மிகவும் எதிர்பார்த்த 10-வது தலைமுறை இன்டெல் கோர் i3-10110U பிராசஸர் வசதி உள்ளது. மேலும் இதனுடன் Celeron 5205U பிராசஸர் வசதியும் இருப்பதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி தேதி பிப்ரவரி 8: 'இதை' செய்யலான உங்கள் அக்கவுண்ட்க்கு நாங்க பொறுப்பில்லை: வாட்ஸ்அப் அதிரடி.!கடைசி தேதி பிப்ரவரி 8: 'இதை' செய்யலான உங்கள் அக்கவுண்ட்க்கு நாங்க பொறுப்பில்லை: வாட்ஸ்அப் அதிரடி.!

 க்ரோம்புக் 2 மாடலில் 4ஜிபி/6

சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் 2 மாடலில் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் 64ஜிபி/128ஜபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

இதனுடன் பேக்லைட் கீபோர்டு வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையா

இந்த க்ரோம்புக் 2 மாடலில் 2 x 5W stereo ஸ்டீரியோ ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது, எனவே சிறச்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இதனுடன் பேக்லைட் கீபோர்டு வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகஇருக்கும்.

க்ரோம்புக் 2 மாடல் ஆனது

சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் 2 மாடல் ஆனது ChromeOS இல் இயங்குகிறது. மேலும் இந்த சாதனம் 45.5Wh பேட்டரியுடன்வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

குறிப்பாக 1.23kg எடை கொண்டு

மேலும் இந்த சாதனம் வைஃபை 6 ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இரண்டு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள், மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் மற்றும் புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக 1.23kg எடை கொண்டு இந்த அசத்தலான லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

 சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் 2

வெளிவந்த தகவலின்படி இந்த சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் 2 சாதனம் ஃபீஸ்டா ரெட் மற்றும் மெர்குரி கிரே நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலை 549 டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.40,300-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Chromebook 2 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X