சாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

|

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த புதிய புக் ஃபிளெக்ஸ் மாடல் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் சாதனத்தின் சிறப்பம்சங்கள் மறறும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.

1920x1080 பிக்சல் திர்மானம்

1920x1080 பிக்சல் திர்மானம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் மாடலில் 13.3-இன்ச் QLED டிஸ்ப்ளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் மெல்லிய பெசல், எடை குறைந்த வடிவமைப்புஆதரவு கொண்டுள்ளது.

உறுதியான அலுமினியம் ஃபிரேம்

உறுதியான அலுமினியம் ஃபிரேம்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா மாடலில் கூர்மையான டைமண்ட் கட் எட்ஜ் மற்றும் உறுதியான அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

புதிய போனிற்கு வாட்ஸ்அப் சாட்களை மாற்றம் செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!புதிய போனிற்கு வாட்ஸ்அப் சாட்களை மாற்றம் செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

ரேம் வசதி

ரேம் வசதி

கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் மாடலில் 8 ஜி.பி. / 12 ஜி.பி. DDR4 ரேம் வசதி மற்றும் 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கு வசதியும் இவற்றுள் அடக்கம்.

720பிக்சல் ஹெச்.டி. கேமரா

720பிக்சல் ஹெச்.டி. கேமரா

மேலும் இந்த சாதனத்தில் 720பிக்சல் ஹெச்.டி. கேமரா, டூயல் அரே டிஜிட்டல் மைக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (1.5 W x 2) ஆதரவுகளும் உள்ளது. குறிப்பாக ஆக்டிவ் பெண் வசதி மற்றும் கைரேகை சென்சார் போன்றவை இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 17.5 மணி நேர பேட்டரி பேக்கப்

17.5 மணி நேர பேட்டரி பேக்கப்

கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் சாதனத்தில் வைபை 6 (Gig+), 802.11ax 2×2, யு.எஸ்.பி.-சி, 2 x யு.எஸ்.பி. 3.0, எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 57வாட் பேட்டரிஇவற்றுள் அடக்கம் என்றும் 17.5 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில்

இந்திய மதிப்பில்

குறிப்பாக கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் ராயல் சில்வர் நிறத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை 829.99டாலர்கள் என ( இந்திய மதிப்பில் ரூ.59,411) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனத்தின் விற்பனை துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Book Flex α 2-in-1 laptop launched with 13.3-inch QLED display : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X