Home
Computer

கேலக்ஸி எல்டிஇ டேப்லெட்டை அப்டேட் செய்யும் சாம்சங்!

By Karthikeyan
கேலக்ஸி எல்டிஇ டேப்லெட்டை அப்டேட் செய்யும் சாம்சங்!

சாம்சங் கேலக்ஸி வரிசை டேப்லெட்டுகளில் மிகவும் பிரபலமான டேப்லெட் கேலக்ஸி 10.1 எல்டிஇ டேப் ஆகும். இந்த டேப்லெட் கூகுள் ஆன்ட்ராய்டு வி3.2 ஹனிகோம்ப் இயங்குதளத்தில் இயங்குகிறது. மேலும் இது மிகவும் சக்தி வாய்ந்த என்விடியா டேக்ரா 2 டூவல் கோர் ப்ராசஸர் மற்றும் எல்டிஇ தொழில் நுட்பம் கொண்டிருப்பதால் இந்த டேப்லெட் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இதன் எடை 565 கிராம் மட்டுமே.

இந்த சாம்சங் கேலக்ஸி 10.1 எல்டிஇ டேப் 10.1 இன்ச் அளவில் மிக அகலமான திரையைக் கொண்டிருக்கிறது. அதனால் 2011ல் மிகவும் விரும்பத்தக்க டேப்லட்டாக வலம் வந்தது.

ஹனிகோம்ப் இயங்குதளத்துடன் இந்த டேப்லெட் மல்டி டாஸ்க் மற்றும் ஸ்பிலிட் வியூவ் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. மேலும் இது டச் விஸ் யுஎக்ஸ் லைவ் பேனலைக் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் வெற்றிகரமாக வலம் வந்ததால் இந்த டேப்லெட்டுக்கு ஏராளமான அப்டேட்டுகளும் மற்றும் ஏராளமான அக்சஸரிகளும் வெளிவந்தன. அவ்வாறு வரும்போதெல்லாம் இந்த டேப்லெட் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் பல நிறுவனங்கள் இந்த டேப்லெட்டுக்கு அப்டேட்டுகள் செய்ய முன் வந்தன.

இப்போது இந்த கேலக்ஸி டேப்லெடில் சாம்சங்கின் டச்விஸ் யூசர் இன்டர்பேஸ் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. ஆனால் இந்த செய்தி அதிகார்ப்பூர்வமாக வரவில்லை என்றாலும் வாடிக்கையாளர்கள் இதை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அப்டேட் பைலின் அளவு 351 எம்பி ஆகும். மேலும் இந்த அப்டேட் இந்த டேப்லெட்டுக்கு அதிக வசதிகளை தரும் என நம்பலாம்.

இந்த அப்டேட்டுக்கு பிறகு இந்த டேப்லெட் மிகவும் ஹேன்டியாக இருக்கும். திரையில் உள்ள மல்டி டாஸ்க் பட்டனுக்கு அடுத்து ஒரு ஸ்க்ரீன் ஷாட் பட்டனும் இருக்கும். அதுபோல் 6 அப்ளிகேசன் லிங்குகள் கொண்ட ஒரு டோக் ட்ரே இதன் டிஸ்ப்ளேயில் இருக்கும். இதில், மேம்பட்ட ஆன்ட்ராய்டு ஸ்டாக் அப்ளிகேசன்களும் இந்த டேப்லெட்டில் இருக்கும்.

இந்த அப்டேட்டுக்கு பிறகு சோஷியல் நெட்வொர்க்கிங் வசதிகளும் இந்த டேப்லெட்டில் அதிகமாக இருக்கும். மேலும் டெய்லி நியூஸ் அப் மற்றொரு அப்ளிகேசனுடன் வருவதால் போட்டோக்களை மிக எளிதாக எடிட் செய்ய முடியும். இந்த டச்விஸ் அப்டேட் டிவ்எக்ஸ் விடியோ பார்மெட்டுகள், ப்ளூடூத் வி3.0 மற்றும் சாம்சங்கின் ஆல்ஷேர் டிஎல்என்எ போன்றவற்றை சப்போர்ட் செய்யும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X