Home
Computer

சாம்சங்கின் எண்ணம் நிறைவேறுமா?

By Karthikeyan
சாம்சங்கின் எண்ணம் நிறைவேறுமா?

மொபைல், டேப்லெட், லேப்டாப் மற்றும் கேமரா என எல்லாவற்றிலும் கலக்கி வரும் சாம்சங் இந்திய டேப்லெட் சந்தையில் 65 சதவீத பங்கைப் பெற வேண்டும் என்று திட்டம் தீட்டி இருக்கிறது. அதற்கான உரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

சமீபத்தில் சாம்சங் 10.1 இன்ச் கேலக்ஸி நோட் 800 என்ற டேப்லெட்டை இந்திய சந்தையில் ரூ.39,990க்கு களமிறக்கியது. இந்த டேப்லெட்டிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் மாதங்களில் இன்னும் பல புதிய சாதனங்களை சாம்சங் களமிறக்க இருக்கிறது.

சாம்சங் இந்தியாவின் தலைவர் ரஞ்சித் யாதவ் கூறும் போது, சாம்சங் இப்போது இந்திய டேப்லெட் சந்தையில் 57 சதவீத பங்கை வைத்திருக்கிறது. இந்த ஆண்டுக்குள் அதை 65 சதவீதமாக அதிகரிக்க விரும்புகிறோம் என்று கூறியிருக்கிறார். அதற்காக புதிய புதிய சாதனங்களையும் விரைவில் களமிறக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக இந்திய மொபைல் நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், கார்போன் மற்றும் சென் போன்றவை குறைந்த விலையில் நல்ல தரமான டேப்லெட்டுகளைக் களமிறக்கி இருக்கின்றன. குறிப்பாக சாம்சங் டேப்லெட்டுகள் ரூ.20,000க்கும் அதிகமாக இருக்கும் போது இந்த நிறுவனங்கள் ரூ.5000க்கு தங்கள் டேப்லெட்டுகளை வழங்குகின்றன.

ஆனாலும் தொழில் நுட்ப வசதிகளைப் பார்க்கும் போது சாம்சங் சாதனங்கள் தனது ரசிகர்களை முழுமையாக திருப்திபடுத்துகின்றன. எனவே சாம்சங்கின் இந்த புதிய திட்டம் அதாவது 65 சதவீத பங்கைப் பிடிக்க வேண்டும் என்ற திட்டம் நிறைவேறுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X