சாம்சங் திவா மற்றும் மோட்டோ பிலிங்-2 ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு

மைக்ரோமேக்ஸ் பிலிங்-2 மிகவும் உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை கொண்டுள்ளது. இந்த மொபைல் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வி2.2 ஃப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டது. சாம்சங் திவாவும் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருந்தாலும் குறைந்த வசதிகளை மட்டுமே வழங்கும்.
சாம்சங் திவா அதிக டாக் டைம் மற்றும் ஸ்டான்ட்-பை டைம் கொடுக்கிறது. பேட்டரி வசதியைப் பொறுத்தவரையில் மைக்ரோமேக்ஸ் பிலிங்-2வை சாம்சங் திவா பந்தயத்தில் முந்துகிறது.
இந்த இரண்டு ஹேண்ட்செட்டுமே சிறந்த மல்டி ஃபார்மெட் மீடியாப் பிளேயர் வசதியினைக் கொடுக்கிறது. மைக்ரோமேக்ஸ் பிலிங்-2 எட்ஜ் தொழில் நுட்ப வசதியினைக் கொண்டுள்ளது. சாம்சங் போனில் குறைந்த வசதிகள் கொண்ட ஜிபிஆர்எஸ் இணைப்பை கொடுக்கும்.
மைக்ரோமேக்ஸ் பிலிங்-2 போனின் மெமரியை 32ஜிபி வரை வேண்டுமானலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். மைக்ரோமேக்ஸ் பிலிங்-2 ரூ.9,000 விலையிலும், சாம்சங் திவா மொபைல் ரூ.8,200 விலையிலும் இந்திய சந்தையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications