Home
Computer

ஆடம்பரத்தை அள்ளி கொடுக்கும் சாம்சங் 9 வரிசை லேப்டாப்!

By Karthikeyan
ஆடம்பரத்தை அள்ளி கொடுக்கும் சாம்சங் 9 வரிசை லேப்டாப்!

உலக அளவில் சாம்சங் நிறுவனம் சிறந்த ஒரு பெயரைத் தக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் இந்த சாம்சங் தனது சாம்சங் 9 வரிசையில் ஒரு புதிய லேப்டாப்பைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய லேப்டாப்பிற்கு என்பி900எக்ஸ்3எ என்ற பெயரை சூட்டி இருக்கிறது.

இந்த புதிய என்பி900எக்ஸ்பிஎ லேப்டாப் பல ஏராளமான தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த லேப்டாப் 1366 x 768 பிக்சல் ரிசலூசன் கொண்ட சூப்பர ப்ரைட் எச்டி எல்இடி டிஸ்பளேயைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேயின் மொத்த அளவு 13.3 இன்ச் ஆகும். இதன் மொத்த எடை 1.31 கிலோவாகும். ஆனால் இதில் தொடு வசதி கிடையாது. இந்த லேப்டாப் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் (64-பிட்) இயங்குதளத்தில் இயங்குகிறது.

இந்த லேப்டாப் 1.5 ஜிஹெர்ட்ஸ் இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர் 2617எம் கொண்ட சிபியுவைக் கொண்டிருக்கிறது. அதுபோல் க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 3000 மற்றும் இன்டல் எச்எம்65 சிப்செட்டையும் தாங்கி வருகிறது.

இந்த 9 வரிசை புதிய லேப்டாப்பில் 1.3 மெகா பிக்சல் கொண்ட முகப்பு வெப்காம் உண்டு. ஆனால் பின்பக்க கேமரா கிடையாது. மேலும் இந்த லேப்டாப்பில் ஜியோ டேக்கிங்கும் கிடையாது.

இந்த லேப்டாப்பின் இன்டர்னல் சேமிப்பிற்காக 8ஜிபி டிடிஆர்3 ரேமைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சேமிப்பை 256 ஜிபி எஸ்எஸ்டி வரை அதிகரிக்க முடியும். அதற்காக 32ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது.

இணைப்பு வசதிகளுக்காக இந்த லேப்டாப்பில் டபுள்யுஎல்எஎன், ப்ளூடூத், யுஎஸ்பி போன்ற வசதிகள் உண்டு. அதுபோல் மல்டி மீடியாவிற்காக இந்த லேப்டாப் ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர் மற்றும் கேம்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளன. அடுத்ததாக ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடியோ ஜாக் போன்றவை இந்த லேப்டாப்பில் உள்ளதால் சிறந்த பொழுது போக்கு சாதனமாகவும் இந்த லேப்டாப் இருக்கும்.

இந்த லேப்டாப்பின் விலை ரூ.115000 ஆகும். விலை அதிகம்தான் ஆனால் தொழில் நுட்பங்கள் அதைவிட அதிகம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X