Home
Computer

புதிய அல்ட்ரா புக்குகளை களமிறக்கும் சாம்சங்!

By Super

புதிய அல்ட்ரா புக்குகளை களமிறக்கும் சாம்சங்!
நாளுக்கு நாள் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நோட்புக்குகளால் நோட்புக் சந்தை களைகட்டி வருகிறது. அந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் 5 சீரிஸ் நோட்புக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நோட்புக் ஒரு உயர்தரம் கொண்ட அல்டராபுக் ஆகும். இதன் எடையும் மிகக் குறைவு என்பதுடன் ஸ்டைலாகவும் இருக்கிறது.

இந்த சாம்சங் வரிசை 2 நோட்புக்குகள் 13.3 இன்ச் மற்றும் 14 இன்ச் அளவு திரை அளவுகளில் வருகிறது. இந்த திரையின் பிக்சல் ரிசலூசன் 1366 x 768 ஆகும். மேலும் இவை ஆன்டி-ரிப்லெக்டிவ் கோட்டிங் கொண்டுள்ளது. அதோடு பேனல்கள் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதால் மிகவும் உறுதியாக நீண்ட ஆயுள் கொண்டு இருக்கும்.

இந்த நோட்புக்குகளின் பிராசஸர் இன்டெலின் 2ஜி பிராசஸர் ஆகும். அதுபோல் 16ஜிபி சாலிட் ஸ்டேட் டிஸ்க் கொண்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதன் இயங்கு தளம் விண்டோஸ் 7 ஆகும். கிராபிக்ஸ் வசதிகளுக்காக இன்டக்ரேட்டட் இன்டெலின் உயர்தர கிராபிக்ஸைக் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு வசதிகளுக்காக எச்டிஎம்ஐ போர்ட்டுகள், வைஃபை, யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் ஆப்டிக்கல் டிஸ்க் டிரைவ் போன்ற அத்தனை வசதிகளையும் கொண்டுள்ளன.

13.3 இன்ச் மற்றும் 14 இன்ச் ஆகிய இந்த 2 நோட்புக்குகளுமே போர்ட்டபுள் தன்மையைக் கொண்டுள்ளன. 13.3 இன்ச் 1.4 கிலோவும் 14 இன்ச் 1.8 கிலோவும் எடையைக் கொண்டுள்ளன. அதே போல் இவற்றின் எடையும் 14.9 மிமீ மற்றும் 20.9 மிமீ ஆகும். ஒரு சில விஷயங்களைத் தவிற மற்ற எல்லாவற்றிலும் இந்த 2 நோட்புக்குகளுமே பெரும்பாலானவற்றில் ஒத்திருக்கின்றன.

இதில் எக்ஸ்பிரஸ் கேச் தொழில் நுட்பம் உள்ளதால் தகவல் பரிமாற்றம் மிக வேகமாக இருக்கும். ஹார்ட் டிஸ்கைப் பொறுத்தவரை 13.3 இன்ச் 500ஜிபி மற்றும் 14 இன்ச் 1 டிபி ஹார்ட் டிஸ்கையும் கொண்டுள்ளன. 14 இன்ச்சில் ஆப்டிக்கல் டிரைவ் உள்ளது.

இந்த புதிய சாம்சங்கின் அல்ட்ரா புக்குகளின் விலை இன்னும் தெரியவில்லை. ஆனால் மலிவு விலையில் வரும் என்று நம்பலாம். மேலும் இந்த நோட்புக்குகள் இம்மாத இறுதிக்குள் முதலில் தென் கொரியாவில் சந்தைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X